பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 அடிச்சுவடு சாணம் நாறலாம்-சந்தனம் நாறலாமா? மாபெரும் தேச பக்தரான இராமநாதன் மகன் குடிகாரன் ஆகாலாமா? இந்தத் கொடுமையை அந்த உத்தமரின் மனைவி அறிந்தால் என்ன நடக்குமோ என்று மைதிலி கலங்கிளுள். உலைவாயை மூடலாம்-ஊர்வாயைக் கூட மூடலாம்-ஆளுல் உண்மையை எப்படி மூடமுடியும் அதை மூட முடிந்திருந்தால் சத்தியம் என்ற சொல்லுக்கு பொருள் வேருக அல்லவா ஆகியிருக்கும். தன் மகன் இரவில் நெடுநேரம் கழித்து வருகிருன் என்பதை அறியத் தொடங்கிய, தாய் உள்ளம் பதறியது: குலவிளக்கான மனைவியை விட்டு விட்டு குடி கெடுக்கும் எவளிடமாவது தன் மகன் தொடர்பு கொண்டு விட்டானே என்று தான் அந்தப் பேதைத் தாய் எண்ணிள்ை. ஆஞ்ல் மனிதனே மிருகமாக்கும் மது அரக்கனுக்கு ஒப்பற்ற தேசபக்தரான இராமநாதரின் மகன் பலியாவான் என்று அவள் கற்பனை கூடச் செய்யவில்லை; ஒருநாள் இரவு மகனைச் சந்தித்த பிறகுதான், தன் அறைக் குச் செல்வது என்ற தெளிவான முடிவோடு சீதை ஹாலில் அமர்ந்திருந்தாள் மைதிலி, நேரமாகிறது. நீங்கள் போய்ப் படுத்துக்கொள்ளுங்கள்' என்று என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை. குடித்து விட்டு வரும் தன் கணவனை அத்தை,பார்த்ததும் என்னென்ன விபரீதங்கள் நேரப் போகின்றனவோ என்று குமுறியபடியே மைதிலி சீதை அருகில் நின்று கொண்டிருந்தாள். தயாளன் தள்ளாடியபடியே வந்து சேர்ந்தான் தனயனைக் கண்ட தாய் உள்ளம் பதறியது. கடுமையான நோய்க்கு எதிர் பாராமல் இலக்காகி விட்டானே என்று தான் அந்தத் தாய் உள்ளம் முதலில் எண்ணியது: * 'மகனே! என்னடா உடம்பு’ என்று கேட்டபடியே புதல்வன் அருகில் சீதை வந்தாள்: அவன் வாயிலிருந்து வந்த நெடி அவள் வயிற்றைக் குமட்டியது; நம்பமுடியாத அளவு பெரும் அதிர்ச்சிக்கு அவள் ஆளாளுள் "குடிக்கிருயா! அட பாவி, குடிக்கிருயா?' தாய் அலறிள்ை: