பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அன்னையும் பிதாவும் ஒருநாள் திடீரென்று பங்கஜம், அர்த்தநாரி, உங்கள் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை. ஒரு வாரம் ஓய்வு எடுத்துக்கொண்டு எல்லோரும் கோயமுத்துரர், உதகமண்டலம் முதலிய இடங்கள் சுற்றிவரலாம் என்றுயோசனை. என்ன சொல்லுகிறீர்கள்? ' என்ருள். அடுத்தமாதம் முதல்வாரம் செளகரியமாகவிருக்கும் ; ஆபீசிலும் அதிக வேலையில்லை என்ருர் கோவிந்தராவும். அர்த்தநாரிக்கு நெஞ்சு அடித்துக்கொண்டது. அதற் கென்ன, செய்யலாம். ஆனால், எங்கள் ஊரில் இப்போது அதிக காலரா உபத்திரவம் என்று கடிதம் வந்திருக்கிறது' என்ருன். எப்படியாவது தப்பித்துக்கொள்ள எண்ணி இவ்வாறு பொய் சொன்னுன் அதைக் கேட்டதும் பங்கஜம் திடுக்கிட்டு, ஐயோ காலராவா ? உங்கள் ஜனங்களை வேறு ஊருக்குப் போகச் சொன் னிர்களா ? இங்கே வரச் சொல்லுங்களேன் ' என்ருள். அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் ' என்ருன் அர்த்தநாரி. பிறகு மூன்று நாள் கழிந்தது. அர்த்தநாரிக்கு ஒரு கடிதம் வந்தது, தமையன் ரெங்கனிடமிருந்து.

  • தம்பி அர்த்தநாரிக்கு, ஆசீர்வாதம்.

இவ்வூரில் விஷபேதி மிகக் கொடுரமாயிருக்கிறது. பலபேர் இறந்து போய்விட்டார்கள். எங்களுக்கு மிகவும் பயமாயிருக் கிறது. அப்பா பழைய மாதிரிதான். என்ன சொன்னலும் கேட்கிறதில்லை, நீ இம்மாதம் அனுப்பிய பணமெல்லாம் செல வழிந்து போயிற்று. இப்போது முப்பது ரூபாய் அனுப்பினால் வீட்டைப் பூட்டிவிட்டுச் சேலம் போயிருக்கலாம் என்று யோசனை. இந்த பேதிப்பயம் நீங்கியபின் திரும்பி வரலாம். இவை, ரெங்கன்.” இதைப் படித்ததும் அர்த்தநாரிக்கு ஆச்சரியமும் திகைப்பும் உண்டாயின. இதென்ன, நான் எண்ணிய எண்ணமோ, சொன்ன பொய்யோ, இவ்வாறு விபரீதமாக உண்மையாய் விட் டது. இது ஒரு தெய்வ பரீட்சையோ என்னவோ தெரியவில்லை' என்று அர்த்தநாரி தனக்குள் சொல்லி ஒன்றும் தோன்ருமலிருந் தான். மறுநாள் பணம் அனுப்பலாம் என்று எண்ணினன். அன்றிரவு அர்த்தநாரிக்குத் தூக்கம் வரவில்லை. கெட்ட எண்ணங்கள், வெட்கப்படக்கூடிய எண்ணங்கள். அவன் மூளை