பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் நாகசண்முகம் 425 " ஏன் அலறுகிருய்-இதிலெல்லாம் தலையிட நீ யார்? வயதான காலத்தில் கிருஷ்ணு, ராமா என்று ஜபம் செய்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தானே ? அவன் உளறின்ை. மது அரக்கன் அவனே உளறச் செய்தான், நம் உடம்பில் தானே நோய் ஏற்பட்டிருக்கிறது? என்று நோயை வரவேற்க முடியுமா ? நம் பிள்ளை குடித்து விட்டுத் தானே உளறுகிருன் என்று தாய் நினைக்க முடியுமா ? அதுவும் இராமநாதன் மனைவியால் அது எப்படி முடியும் ? சீதையின் வயிறு எரிந்தது. தன் கணவன் இறந்த போதே தானும் இறக்காமல் போளுேமே என்று துடித்தாள்: ஹாலிலே நெடிதுயர்ந்து நின்ற காந்திமகானின் படத்தை அவள் தன் மகனுக்குச் சுட்டிக் காட்டினள். - இந்த மகானின் பரம பக்தர்களில் ஒருவரான உன் தந்தைக்கு நீயா பிள்ளை ?’’ என்று சீறினுள், தயாளன் பேய் போலச் சிரித்தான்; ' இந்தக் காந்தி படம் இருப்பதால் நான் குடிக்கக் கூடாது என்ருல் இப்போதே அதை நான் எடுத்து எறிந்து விடுகிறேன்' என்று உளறிய அந்த வெறியன் மகானின் படத்தை நோக்கி நடந்தான்; மைதிவி பயத்தால் ஊறிட்டாள். அந்தத் தெய்வத் தாய்க்கு, எங்கிருந்து தான் அந்த பலம் வந்ததோ படத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த மகனே நோக்கி ஓடியவள், அவனை அப்படியே தன்புறம் திருப்பிள்ை அடித்தாள், கை ஓயும் வரை அடித்தாள். பிரமைபிடித்த நிலையில் தயாளன் நின்றன். கை ஓயும் வரை அடித்த அந்தத்தாய் மெய்சோரக் கீழே விழுந்தாள். மறுநாள் உதயத்தில் சீதை இந்த உலகை விட்டுப் போய் விட்ட செய்தியைத்தான் ஊர் மக்கள் கேள்விப் பட்டார்கள்; சீதை இறந்த 9అ மாதத்திற்கெல்லாம் மைதிலி ஆண் குழந்தைக்குத் தாய் ஆள்ை. தாய் இறந்ததாலோ தனயன் பிறந்ததாலோ தயாளன் எந்த மாற்றத்திற்கும் இலக்காக வில்லை. அவனை மைதிலி திருத்த முயலவில்லை. தாயால் முடியாமல் போனதைத் தன்னல் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லை........!