பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 அடிச்சுவடு எண்ணச் சூழல்களுக்கு இலக்காகி நின்ற தயாளன் தன் தலையிலிருந்து வழிந்து கொண்டிருந்த மழை நீரைத் தன் கைகளால் வழித்து விட்டுக் கொண்டான். மீண்டும் கண்ணனும் கமலமும் பேசத் தொடங்கினர்கள்: ' கமலம், மணி ஒன் ப ைத ரை ஆகுது. வா. நாம சாப்பிடலாம்.' ' எனக்கென்னவோ மனசே சரியில்iங்க. பாவம் மைதிலி கைக் குழந்தையோடே கண்ணிர் விட்டுக் கலங்குறதை நினைச்சா என் நெஞ்சே வெடிச்சுடும் போலே இருக்கு.' நமக்கு அப்படியிருக்கு, ஆனல் தாய் இறந்த பின்னலே கூட அந்தத் தயாளன் புத்திமாறலேயே ’’ மழை கொட்டுது. அந்த ஆளாக குடிவெறியிலே காரைக் கொண்டு போய் எங்கேயாவது மோதிட்டா, அதனலே ஆகக் கூடாதது ஏதும் ஆயிட்டா, மைதிலி நிலை என்னங்க ஆகும்? ’’ கமலம் விம்மிள்ை. 'நீ இதைச் சொல்ற போது தான் எனக்குப் பழைய நினைவு வருது. என் பாட்டன் காலத்தில் இந்தத் தயாளன் குடும்பத்திற்கு இணையாகத் தான் எங்கள் குடும்பமும் இருந்தது: என் தந்தை குடிக்கத் தொடங்கிக் குடியையே கெடுத்து விட்டார். தயாளன் தந்தை நல்லவராக இருந்ததால் என்னைப் படிக்க வைத்து ஆளாக வழி செய்தார். இப்போது அவர் இல்லா விட்டாலும் அவர் குடும்பத்தில் வேலை பார்க்கும் நிலைக் குக்கூட வழி செய்தார். கமலத்தின் விம்மல் ஒலி அதிகமாயிற்று. மேலும் அங்கு நிற்க முடியாத தயாளன் உள்ளம் தடுமாற உணர்ச்சிகள் வட்டமிட, அங்கிருந்து மெல்ல நடந்தான். தன் வீட்டு ஹாலை அடைந்தான். ஹாலில் ஓர் ஒரத்தில் அரிக்கேன் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. மைதிலி தன் செல்வனைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே விம்மிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி ஓர் ஒரமாக உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண் டிருந்தாள்: . மைதிலி! ... தயாளன் மனைவியை அழைத்தான். அவன் குரல் கரகரத்தது.