பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் காகசண்முகம் 427 சிறிய விளக்கொளியில் வந்தது கணவன் தான் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத மைதிலி ஒரு முறை கீரிச் சிட்டு விட்டாள். " நான் தான், மைதிவி ! '...... தயாளன் இப்போது தெளி வாகக் கூறினன். அவன் குரலிலிருந்த மாற்றத்தைக் கண்டு மைதிலி வியப் புணர்ச்சிக்கு ஆளாளுள். முற்றத்துப் படியில் நின்ற அவன் அங்கிருந்து உள்ளே வந்தான். அவன் தன்னை நோக்கித்தான் வருகிருன் என்று மைதிலி நினைத்தாள்: அவன் ஹாலின் மற்ருெரு புறத்தை நோக்கி நடந்தான்....... அவன் எ ங்கே போகிருன் ? குடி மயக்கத்தில் நினைவற்றுப் போகிருன ? பேதை நெஞ்சம் தவித்தது. தயாளன் இப்பொழுது நினைவோடு தான் சென்று கொண் டிருந்தான். நெடிதுயர்ந்து நின்ற மகாத்மாவின் படத்திற்கு அருகிலே சென்று அவன் நின்ருன். அந்த எளிய வெளிச்சத்திலும் அந்த ஏந்தலின் கால்களைத் தொட்டு வணங்கியபடி அவன் விம்மினன். என்ன வியப்பு மின்னல் ஒளியால் செயலற்றுப் போன மின்சாரம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. வீடு எங்கும் மின் விளக்குகள் பளிச்சிடத் தொடங்கின. முற்றத்திலே கண்ணனும் கமலமும் நின்று கொண்டிருப்ப்தை தயாளனும் மைதிலியும் கண்டார்கள். - யாரோ போவது போன்ற ஒசை எழவே கண்ணன் வெளியே வந்து பார்த்ததால், போவது தயாளன் தான் என அறிந்து என்ன நடக்கிறது என்று காணத் துடிப்போடு அவனை பின் தொடர்ந்து வந்தவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். நீர் ஒழுகும் கண்களால் தயாளன் மனைவியையும், கண்ணனை யும், கமலத்தையும் பார்த்தான். 'கண்ணு ! மைதிலியின் துயரத்தைப் பற்றி நீயும் உன் மனேவியும் கொண்ட கவலையில் நூற்றில் ஒரு பங்குகூட நான் கொள்ளவில்லை. நீங்கள் அப்படிக் கவலைப்பட்டதற்குக் காரணம் என்ன ? உங்கள் உள்ளம் நல்ல உள்ளம். உள்ளம் நல்லதாக