பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 அடிச்சுவடு அமைந்து விடுகிற போது அன்பும் பாசமும் அங்கே குடியிருக்கத் தொடங்கி விடுகின்றன. அதனுல் தான் காந்தியடிகள் மனத் தூய்மையோடு வாழ வேண்டும் என்று கூறினர். அதை நான் உணர்ந்து விட்டேன். மனிதனுக்குச் சிறப்பாக உள்ளது பகுத் தறிவு. அதையே பாழ் செய்யக் கூடியது குடி. எனவே குடிப்ப வன் எப்படி முழு மனிதனுவான் ?. மைதிலி! இன்று முதல் நான் முழு மனிதனுகி விட்டேன். கண்ணிரைத் துடைத்துக் கொள் !... மகான்களுடைய அடிச் சுவடுகள்தான் மக்களை பூவுலகிலேயே சுவர்க்க போகத்தில் வாழச் செய்யும் வழிகாட்டிகள் ஆகும் நமது புண்ணிய பூமிக்கு காந்தியடிகளுடைய அடிச் சுவடுகளை விடச் சிறந்த வழிகாட்டிகள் எங்கே அமைய முடியும். இவற் றைக் கூறிய தயாளன் உணர்ச்சிப் பிழம்பாக நின்ருன். மைதிலியும், கண்ணனும், கமலமும் மானசீகமாக காந்தி மகானின் அடிச் சுவடுகளுக்கு மாபெரும் அஞ்சலி செலுத்தினர் கள்,