பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியன் 42 சத்தியத்தின் சின்னம் மங்கிப் போயிருந்த அந்தக் குத்துவிளக்கைச் சுடர் தட்டி, எண்ணெய் ஊற்றிப் பிரகாசிக்கச் செய்தாள் ரங்கநாயகி. அந்தத் தீப ஒளியிலே, குடிசையினுள் உறங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் முனகிக் கொண்டே புரண்டு புரண்டு படுப்பது அவளுக்குத் தெரிந்தது. கிழிந்த பாயிலும், ஒலையிலும் சுருண்டு கொண்டிருந்த ஜீவன்களுக்கு அருகில், பளிச்சென கம்பீரமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது அவளுடைய சுழல் ராட்டை, - விளக்கைத் துரண்டிய பிறகு, மீண்டும் ராட்டை அருகே சென்று அமர்ந்தாள் ரங்கம், கை தானக அதைச் சுழற்றியது. ராட்டையைப் போலவே அவள் மனமும் சுழன்றது. அவள் கணவன் முருகேசன், வீட்டுக்கு வந்து போய் முழுசாக மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அன்று கடைசியாக அவன் வந்த போது, சட்டிப் பானைகளையெல்லாம் துழாவி ஏதாவது சில்லறைக் காசு இருக்கிறதா என்று ஆராய்ந்தான். ஒன்றுமில்லாமற். போகவே, ஏமாற்றத்தில் ரங்கத்தின் மீது எரிந்து விழுந்தான். கணவனின் மனநிலையைப் புரிந்து கொண்டிருந்த ரங்கம், அவனுக் குப் பிடித்தமான கீரைக் குழம்பும் சோறும் போட்டு, ஆத்திரத் துடன் வந்திருந்த அவனைச் சற்று அமைதியுறச் செய்தாள்) உண்ட பிறகு சிறிது நேரம் மனைவியுடன் சிரித்துப் பேசிக்கொண் டிருந்தவன், அப்படியே தூங்கி விட்டான். பொழுது விடிந்ததும் எங்கேயோ எழுந்து போய்விட்டான். அவ்வளவுதான் ; இனி என்றைக்கு வீடு திரும்புவான் என்பது. அவனுக்கே தெரியாது. இப்படித்தான் அவனுடைய வாழ்க்கைச்