பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 சத்தியத்தின் சின்னம் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. ஒழுங்காக ஒரு இடத்திலே வாட்ச்மேன் வேலை செய்து கொண்டு வந்தவன், போக்கிரி களுடன் சேர்ந்து கொண்டு, வேலையைத் துறந்து, சோம்பேறியாக மாறின தினத்திலிருந்தே ரங்கத்துக்கு மனது உடைந்து விட்டது. ஒழுங்காக இயங்கிக் கொண்டிருந்த அவளுடைய வாழ்க்கை இழை, அதுமுதல் அடிக்கடி அறுபட்டுக் கொண்டிருந்தது. தன் மனைவியின் பஞ்சு போன்ற மென்மையான உள்ளத்தை மிக மிக நோகச் செய்தான் அவன். வாரம் ஒரு முறை, இரு முறை வீட்டிற்கு வருவான். அப்பொழுதெல்லாம், துரை’க்கு நல்ல சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடி, உதை, குத்துதான்! பாவம், ரங்கம் ஒரு கைராட்டையை வைத்துக் கொண்டு, அதில் நூல் நூற்று, சிட்டம் தயாரித்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு, திட்டமாகக் குடித்தனம் நடத்தி வந்தாள். அம்பர் ராட்டை வாங்கில்ை, இன்னும் சுலபமாக அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், கணவனுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்ச மாகப் பணம் சேமித்துக் கொண்டிருந்தாள். முருகேசனுக்குத் தன் மனைவியிடம் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கச் சொல்லியா தரவேண்டும் ? அந்த முழுப் பணமும் ஒரு முறை, முருகேசனல் கிண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. ஆனல் அதற்காக ரங்கம் முருகேசனிடம் கடுமையாக நடந்து கொண் டாள், பொறுமையை இழந்து பேசிளுள் என்பதே கிடையாது. காந்தி மகான் கண்டுபிடித்த கைராட்டையைச் சுழற்றிப் பயிற்சி பெற்றவர்களுக்கு பொறுமையை இழக்கவே முடியாதே! ராட்டை' போதிக்கும் மாபெரும் பாடம் அது தானே! என்ருவது கணவன் திருந்த மாட்டான என்ற நம்பிக்கையில் அவள் வாழ்வு ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அண்மையில் தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்ததால், அவள் கொஞ்சம் நூலே அதிகமாகவே நூற்ருள். தான் வைத் திருந்த பழைய தையல் மிஷினில் சிலருக்குத் துணியும் தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளை, இன்று வரை அந்த இரண்டுக்கும் முருகேசனல் ஆபத்து வர, வில்லை, அது ரங்கம் செய்த பெரும் புண்ணியம்தான் ! 兴 蚤 举 சீட்டி ஒலியை மெதுவாக எழுப்பிக் கொண்டு, கட்டம் போட்ட கைக்குட்டையை கழுத்தில் கட்டிய வண்ணம் பிளாட்பாரத்தில், ஏதோ பெரிய காரியத்தை சாதிக்கப் போகிறவன் போல், ஆழ்ந்த சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்