பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.32 சத்தியத்தின் சின்னம் முருகேசன் சிறிது யோசித்தான். விஷயம் கொஞ்சம் தவருக இருந்தாலும் வேலை சுலபம், நல்ல கூலியும் கிடைக்கும் போலிருக் கிறது, ஒப்புக்கொண்டால் என்ன ? 'சரி, கோர்ட்டுக்கு வந்து பொய் சாட்சி சொன்ன எவ்வளவு கொடுப்பே? நூறு ரூபாய் கொடுப்பியா ? ' என்று கேட்டான். அடப்பாவி செயின் விலையே அவ்வளவு இருக்காதே ! சும்மா இரண்டு வார்த்தை சொல்றதுக்கா இவ்வளவு பணம் கேட்கிறே? ' பொய் சாட்சின்ன சும்மாவா? மனச்சாட்சியையே இல்லே விக்கணும் ? ’’ 'அதல்லாம் இல்லே, ஐம்பது ரூபா தரேன் அட்வான்ஸ்ா இந்தா பத்து ரூபாய் ' என்ருன் பக்கிரி. கையை நீட்டிய முருகேசத்திடம், பத்து ரூபாய் நோட்டை வைத்து, முருகேசு டபாய்ச்சிடப்போறே ! ஏட் ஐயா கிட்டே கூடச் சொல்லி வச்சிருக்கேன். திங்கக்கிழமை கரெக்டா பதி ைேரு மணிக்கு வந்துடு’ என்று எச்சரித்தான்.

  • நீ போ நயின, என்னை கரிக்டா பதிைேரு மணிக்கு கோர்ட்லே கண்டுக்கலாம் ' என்று சொல்லிவிட்டுச் சென்ருன் முருகேசன். அன்றிரவு அவன் நேரம் கழித்துத்தான் வீடு திரும் பினன். அப்போது அவன் கண்ணுக்குப் பட்ட உருவங்களெல் லாம் இரட்டையாகவே தெரிந்தன.

குயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்த முருகேசத்தின் நிலை யைச் சாதாரணமாக வர்ணிக்க முடியாது. அன்று ஒரு சினிமாக் கொட்டகையில் புதுப் படம் ஒன்று வெளியாகியிருந்தது. டிக்கெட் கொடுக்கும் ஜன்னலுக்கு முன்னல் கூட்டம் இடித்துப் புடைத்துக் கொண்டு நின்றது. முருகேசன் அந்த கூட்டத் தில் எப்படியோ புகுந்து அடிபட்டு உதைபட்டு சட்டை கிழிந்து அலங்கோலமாக வெளியே வந்தான். இத்தனையும் எதற்காக? டிக்கெட் வாங்கி சினிமா பார்க்க அல்ல அந்த டிக்கெட்டுகளை வாங்கிக் கள்ள மார்க்கெட்டில் விற்று நாலு ஐந்து தேற்றிக்கொள்ளத்தான். இரவு பன்னிரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தவன், மறு நாள் பகல் பத்துமணிக்குத்தான் எழுந்திருந்தான். அன்று திங்கட்கிழமை, கோர்ட்டுக்குப் போக வேண்டிய நாள். -