பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43.4 சத்தியத்தின் சின்னம் வாரி விட்டு விடுவானே என்று பயந்தான். நல்ல வேளையாகத் தூரத்தில் முருகேசன் வருவதைப் பார்த்ததும் தான், அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆவலுடன் அவனே எதிர் கொண்டு அழைத்தான் பக்கிரி3 ' என்னப்பா இவ்வளவு லேட்டு ’’ என்று ஆரம்பித்தவன், அட கதர்ச் சட்டையா ? பெரிய ஆள் ஆயிட்டேப்பா நீ ’’ என்ருன்; முருகேசன் தான் போட்டுக் கொண்டிருந்த ஷர்ட்டைப் பார்த்தான். அவனுக்குச் சுரீர் என்றது. என்ன ! கதர் சட்டைகா ? என்று சொல்விக் கொண்டே சட்டையைத் தூக்கிப் பார்த்தான். அந்தச் சட்டையில், அந்த வெண்ணிற ஆடையில், அண்ணல் காந்தியின் முகம் தெரிந்தது, அவனுக்கு; அந்தத் துளய ஆடையில், தேசத்தின் சின்னம் தெரிந்தது அவனுக்கு. அந்தப் பரிசுத்தத் துணியில் ஆயிரமாயிரம் தியாகி கள் ஈடுபட்ட புனிதமான தேசீயப் போராட்டம் தெரிந்தது அவனுக்கு: - ஐயோ, இது சத்தியத்தின் சின்னமல்லவா ? காந்தி மகாத்மா கண்டு பிடித்த மூலிகை அல்லவா ? இதை வைத்துக் கொண்டு தானே நமக்கு அவர் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்? நமக்குக் கிடைத்த சுய ராஜ்யமே இதல்ை தானே ? சத்தியத்தின் சின்னமான இந்தத் தூய கதராடைக்கு மாசு ஏற்படுத்துவதா ?” முருகேசனின் மனப்பாறையில் இப்படிப்பட்ட எண்ண அலைகள் வந்து மோதின. சட்டையையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் முருகேசன். பக்கிரிக்கு ஒன்றும் புரியவில்லை. முருகேசனின் உள்ளத்தில் மிகப் பெரிய போராட்டம் நடந்து கொண்டிருப் பதை அறியவில்லே அவன்: விசாரணை ஆரம்பமாயிற்று. முருகேசன் சாட்சிக் கூண்டில் ஏறிஞன், பொய் சாட்சி சொல்லக் கூண்டில் ஏறினவன், உண்மை பேசினன் ! தான் பொய் சாட்சி சொல்ல வந்ததாக ! தனக்குப் பணம் கொடுத்துப் பேசச் சொன்னர்கள் என்று கூறி தான் கை நீட்டி அட்வான்சாக வாங்கிய அந்தப் பத்து ரூபாயை வீசி எறிந்தான். பக்கிரியின் மூக்கு உடைந்து விட்டது. முருகேசனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்றே அவன் எண்ணின்ை. முருகேசனின் உள்ளத்தை அந்தக் கதர்ச்சட்டை மாற்றி விட்டது என்பதை அவனல் புரிந்து கொள்ள முடிய வில்ல்ை புடம் போட்ட தங்கத்தைப் போன்று, அக்கினியில் வீழ்ந்தெழுந்த உத்தமியைப் போன்று, சத்தியத்தின் சின்னத்தின்