பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜி 27 யைக் கலக்கிக்கொண்டிருந்தன. தன் தகப்பனரைப்பற்றி நினைக் கும்போதெல்லாம் அவனுக்கு வெறுப்பு உண்டாகும். அவன் இந்த விஷபேதியில் இறந்து தீர்ந்துபோனல் விசனமில்லை என்று அடிக்கடி அவன் மனத்தில் ஒர் எண்ணம் தோன்றும். சீ ! இது பாவம் என்று உடனே மறு எண்ணம் தோன்றும். இப்படி இர வெல்லாம் படுக்கையில் புரண்டு துரக்கமில்லாமல் மறுநாள் காலை எழுந்து பச்சைத் தண்ணிரில் குளித்தான். தபால்காரன் கடிதங் கள் கொண்டுவந்தான். எதிர்பார்த்தபடி ஊரிலிருந்து மற்ருெரு கடிதம் வந்திருந்தது. கை நடுங்கக் கடிதத்தைப் படித்தான். " அப்பாவுக்குப் பேதி கண்டிருக்கிறது. எப்படியாகுமோ, பயமாயிருக்கிறது. மாரியாயி காப்பாற்ற வேண்டும் கையில் ஒரு காசுமில்லை. ரெங்கன். ' கடிதம் படித்து முடிந்ததும் அர்த்தநாரி ழுகம் கறுத்தது. வெகுநேரம் வரையில் நாற்காலியில் உட்கார்ந்தபடியே இருந் தான். அன்றும் பணம் அனுப்பவில்லை. 5 மறுநாளும் பணம் அனுப்பவில்லை. ஒரு கடிதமும் வர வில்லை. ஊரில் காலரா சமாசாரம் என்ன ? ' என்ருள் பங்கஜம். அப்படியேதானிருக்கிறதாம் ' என்ருன் அர்த்தநாரி. காப்பிக்குச் சர்க்கரை போதுமா ?' என்ருர் கோவிந்த ராவ், - போதும், வெகு நன்ருயிருக்கிறது' என்ருன் அர்த்தநாரி: பிறகு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனதும் ஒரு கடிதம் வந்து காத்திருந்ததைப் பார்த்தான். அம்மாவுக்கும் பேதி கண்டிருக்கிறது. நீ பணம் அனுப்ப வில்லை. திக்கில்லாமல் சாகிருேம். உடனே வரவும். ரெங்கன். அன்றும் அர்த்தநாரி பணம் அனுப்பவில்லை. இதற்குள் மனத்தைக் கல்லாகச் செய்துகொண்டு விட்டான் ! அவமானத் திற்குக் காரணமாயிருக்கும் என் இழிபிறப்பு இத்துடன் மறைந்து போகும். இது சுவாமியே எனக்குத் தரும் விடுதலைபோல் காண் கிறது. அவன் செயலுக்கு மேல் என்ன தருமம், என்ன நியாயம்? அதை நான் ஏன் தடுக்கவேண்டும்; அம்பாவும் அம்மாவும் இறந்துவிட்டால் நான் பங்கஜத்தைக் கலியாணம் செய்து