பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ. ரா. சுந்தரேசன் 43 அவள் இட்ட குங்குமம் lொலாங் பகுதியில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரம்: மிருகத்தனமான சீனன், பாரத மண்ணில் வைத்த காலைத் துண்டிக்கத் துடித்தெழுந்த ஆயிரமாயிரம் வீர இளைஞர்களில் கோவிந்தராஜூவும் ஒருவன். மையிருளிலும், பனியிலும், காற்றிலும் அச்சமென்பதே இல்லாத நிலையில் ஆயுதமும் கையுமாய் வடகிழக்கு எல்லையைக் காக்கும் ஜவான்களில் கோவிந்தராஜுவும் ஒருவன். துப்பாக்கியும் கையுமாய், இருளில் எதிரியைக் கொன்று கிழிக்கும் துடிப்புடன் கோவிந்தராஜு காவலிருந்தான்; தூரத்தே சீனனின் ஈவிரக்கமற்ற மார்ட்டர் பீரங்கிகளின் அனல்கக்கும் வெடி ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. கோவிந்தராஜூவின் ரத்தம் கொதித்தது. துப்பாக்கியைப் பிடித்திருந்த அவன் உணர்ச்சி தாளாமல் அடிக்கட்டையை மண்ணில் அறைந்தான். மூன்று மைல் தொலைவுள்ள புத்தகளத்துக்கு அவன் போகத் துடித்தான். ஆனல், ராணுவ அதிகாரியின் கட்டளையை எப்படி மீற முடியும்? இந்தக்காவல் நிலையத்தில்தான் அவனுக்கு வேலை. முதல் அணி போர் செய்து கொண்டி ருந்தது, மூர்க்கத்தனமாக முன்னேறி வந்து கொண்டிருந்த சீனனுடன்: