பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ. ரா. சுந்தரேசன் 437 இரண்டாம் அணி தயாராக நின்றிருந்தது, உத்தரவுக்குக் காத்து, இரண்டாம் அணியைச் சேர்ந்தவன் கோவிந்த ராஜு. - - காதில் விழும் ஒவ்வொரு வெடிச் சத்தமும் எத்தனை வீர உயிரைக் குடித்ததோ ? எப்போது வரும் கட்டளை, எப்போது வரும் கட்டளை என்று நொடிக்கு நொடி எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் கோவிந்தராஜூவும் அவனைச் சேர்ந்த பிரிவினரும். கோவிந்தராஜு இருப்புக் கொள்ளாமல் நடந்தான். ' ராஜூ ! ’ என்ருன் அவனுடைய தோழன் அஹமத். ' இன்று நீ வழக்கமாகச் செய்யும் காரியத்தைச் செய்யவில்லை போலிருக்கிறதே ? .' ராஜூவுக்கு அப்போதுதான் நினைவு வந்தது. முத்தம்மாவை இன்று பூராவும் அவன் நினைக்கவே இல்லை. எப்படி நினைக்க முடியும்? அவன் உடலில் ஒடிய ஒவ்வொரு அணுவிலும் சீனனை விரட்டும் சினமே கொந்தளித்துக் கொண் டிருந்தது. போர்க்களத்தில் வீட்டையும், காதலையும் நினைக்க நேர L)వుడిని - - அது வீரனைக் கோழையாக்கும் என்ரு ? அல்லவே அல்ல; கோவிந்தராஜூவின் பரம்பரை வீரப் பரம்பரை. அவனது தந்தையும் யுத்த வீரராக இருந்தவர்தான். தன் மகன் ராணு வத்தில்தான் சேர வேண்டும் என்று அவர் அவனைச் சேர்த் தார். தாய் மட்டும் இளைத்தவளல்ல. வீரப்புதல்வனைப் பெற்றதோடல்ல; யுத்த நிதிக்குத் தன் திருமாங்கல்யத்தையே கழற்றிக் கொடுத்துவிட்டு, மஞ்சள் கொம்பும் கழுத்துமாய்ப் புன்னகையுடன் விளங்குகிருள், ... " - கோவிந்தராஜாவுக்கு உணர்ச்சி முட்டியது. அவனது இளம் மனைவி முத்தம்மா. . . . அவ்ஸ் அவனது நெற்றியில் வீரத் திலகமிட்டுப் போருக்கு அனுப்பி வைத்தாள். அவளைப் பற்றிப் பெற்றேர் அவனுக்கு எழுதிய கடிதம் ஒரு வாரம் முன்னர் அவனுக்குக் கிடைத்தது: போர்க்களத்தில் அவர் குளிரிலும் பனியிலும் போரிட, எனக்கு பஞ்சு மெத்தை தலையணியா?’ என்று முத்தம்மர் வெறும் தரையில் தான் படுக்கிருளாம். எவ்வளவு குளிராயிருந்தாலும் போர்த்துக் கொள்வதில்லையாம். • *, *, * * * . . - “... . . ."