பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 அவள் இட்ட குங்குமம் "...இலை போட்டுச் சாப்பிடுவதில்லை. ரொட்டியோ சோருே, ஏதேனும் ஒரு வேளைதான்." இரவுத் தூக்கமும் நாலு மணி நேரத்துக்கும் குறைவு. இப்படி உன் மனைவி ஒரே பிடிவாதமாகச் சுகங்களைத் துறந்திருக் கிருள். நீ அவளுக்கு ஒரு வார்த்தை அன்புடன் கண்டித்து எழுது. அவள் உடம்பு எதற்காகும்? உனக்காக, நாட்டுக்காக அவள் எடுத்துக்கொண்டுள்ள விரதங்கள் பட்டியலில் அடங்காது; அப்புறம், ஞாபகமாக உனக்கு இதை எழுதச் சொன்னாள்: அவள் என்னவோ உன்னிடம் சொல்லியிருக்கிருளாம், அதைத் தினமும் விடாமல் செய்து வரவும் என்று எழுதச் சொன்னுள். இங்கு அனைவரும் நலமே. நீ வீரத்திருமகன். கொடுமைச் சீனனை வென்று உன்னை ஈன்ற பாரதத் தாயின் மணி வயிற்றைக் குளிரச் செய். உன் உயிரைப் பணயம் வைத்தாலும் கடமையிலிருந்து வழுவாதே. அதற்காக நாங்கள் வருந்த மாட்டோம். நெஞ்சு மகிழ்வோம், நாட்டைக் காக்க ஒரு நல் வீரனைத் தந்தோம் என்று, - உன் வீரம் வாழட்டும். எதிரியைப் பொடி செய்! மாற்ருன் மனை புகுந்த ஈனப் பகைவனை உன் துப்பாக்கி முனை கொன்று கிழிக்கட்டும். . உன், தந்தை”. கடிதத்தை மடித்துப் பையில் போட்டுக் கொண்டான். முத்தம்மா சொன்னதை நேற்று வரை தினமும் அவன் நடத்தி விட்டான். இன்று உணர்ச்சிப் பெருக்கில், காதில் ஒலித்த எதிரியின் பீரங்கிச் சப்தத்தில், சீறி எழுந்து துடிக்கும் சினத்தில் மறந்து போய்விட்டான், அஹமத் ஞாபகப்படுத்திவிட்டான். மிகவும் நன்றி அஹமத், ' என்று கூறிவிட்டு, கோவிந்தராஜு தன் மடித்த பிளாங்கட்டுக்குள் வைத்திருந்த பொட்டலத்தை எடுத்தான். அது அவன் மனைவி அவன் நெற்றியில் தினமும் அவள் நினைவாக இட்டுக் கொள்வதற்காகக் கட்டிக் கொடுத்த குங்குமம், 'அத்தான், எனக்கு நல்ல தைரியம் தான். நீங்கள் நிம்மதி யாகப் போய் வெற்றியுடன் வாருங்கள்,' என்று அவன் நெற்றிக் குப் பொட்டிட்டவள் கூறினள். ' அத்தான்! எனக்காக ஒன்று செய்வீர்களா?”. சொல்லு, செய்கிறேன்.