பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ. ரா. சுந்தரேசன் 德岛姆 இது நம் அம்மன் குங்குமம், உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, என் ஞாபகத்துக்காக தினமும் இதைக் காலையில் நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இதை நெற்றியில் வைக்கிறபோதெல்லாம் உங்களுக்கு நான் வெற்றி யோடு வாங்க என்று பொட்டிட்டது ஞாபகம் வரும், என் பெயரைச் சொல்லி ஒரு பத்து எதிரியைக் கொல்வதற்கு வீரம் பிறக்கும் !' கோவிந்தராஜு குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண் டான். ஏளுே சரியாக ஒட்டவில்லை. அது எப்படி ஒட்டாமல் போகும் ? விடலாமா அதை ? அஹமத் உதவிக்கு வந்தான். கொஞ்சம் தண்ணீர் போட் ருக் குழை. பிசின் இல்லே ?' என்றவன் தன் வாட்டர் பேக்கி லிருந்து தண்ணீர் சிறிது விட்டான்.

  • 彰 போதும், போதும். கை நிறையவா ஊற்றுகிறது ?' என்று சிரித்த கோவிந்தராஜு, குங்குமத்தை அளவாகத் தண்ணிர் விட்டுக் குழைத்து நெற்றியில் திலகமிட்டுக் கொண்டான்.
  • அச்சா பிளாரசென்ட் கலர் மாதிரி டாலடிக்குதே ? . ஒஸ்திக் குங்குமம் !" என்று சிரித்தான் அஹமத்.

நமது ரத்தத்தைவிடச் சிவப்புக் குறைவுதான். நமது வீரத்தைவிட ஒளி குறைவானதுதான். ' என்று கோவிந்தராஜு சிரித்தான். - அதே தேரம் ஒயர்லஸ் அலறியது | உத்தரவு வந்துவிட்டது! • இரண்டாம் அணித் துருப்புக்கள் உஷார். உடனே புறப் படுங்க எதிரி முதல் அணியைப் பிளந்துவிட்டான்.” சிம்மம்போல் சிலிர்த்தெழுந்தது இரண்டாம் அணி. சினனே நேருக்கு தேர் யுத்த களத்தில் கோவித்தராஜு அப்போதுதான் முதல் தடவை பார்த்தான். குள்ளநரி உருவங் கள் மலேச்சரிவில் பீரங்கிகளுடனும், துப்பாக்கிகளுடனும் வெறி பிடித்த வேகத்தோடு முன் வருவது தெரிந்தது. இந்தியத் தரப்பில் யந்திரத் துப்பாக்கிகள் அனல் கக்கின. குண்டு மழை பொழிந்தன. இந்தியப் பீரங்கிகளின் கர்ஜனை எல்லே கடந்த உலுத்தர்களின் உயிரை வாங்கத் தவறவில்லை: ஆயினும் ஈசல்கள் விளக்கில் விழுவது போல் எதிரிகள் வந்து குவிந்த வண்ண மிருந்தனர்.