பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 அவள் இட்ட குங்குமம் கோவிந்தராஜூ ஒரு பாறை மறைவில் மறைவாக இருந்து கொண்டு எதிரிகளுக்கு அதிகபட்சம் எவ்வளவு சேதமுண்டாக்க முடியுமோ அவ்வளவும் செய்தான். எறி குண்டுகளை எறிந்து இருபது பேர் அடங்கிய சீனப் பிரிவை நிர்மூலமாக்கினன்: "தாயே, உன்னை இழிவாக நினைத்து உன்னை நெருங்கிய அன்னி யனை இன்னமும் ஒழிப்பேன்,' என்று கத்தியவாறு, மற்றுமொரு எறி குண்டை எறிய யத்தணிக்கையில் தான்... எதிரிகளில் ஒருவன் கோவிந்தராஜூவின் மறைவிடத்தை அறிந்துவிட்டான். அடுத்த நிமிடம் அந்தச் சீனனின் யந்திரத்துப்பாக்கியின் நோக்கு கோவிந்தராஜூவின் பக்கம் திரும்பியது: பட பட பட பட வென்று தொடர்ந்து சுட்டுத் தீர்த்தபின் திமுதிமுவென்று ஓடிவந்தனர் சீனர்கள். பாவம், அவர்களுக்குத் தான் எத்தனை ஏமாற்றம் ! குறைந் தது ஆறு இந்தியச் சிப்பாய்களாவது அந்தக் குழியிலிருந்து கொண்டு இவ்வளவு நேரம் தங்களைத் தாக்கியிருப்பார்கள் என்று நினைத்து வந்து பார்த்தால், ஒற்றை வீரன் மல்லாந்து கிடக் கிருன் ! சீனமொழியில் ஏதோ பேசியவர்கள் கோவிந்தராஜுவைக் காலால் எட்டி உதைத்து இருவர் புரட்டினர். ஒரு சீன்ன் தன் துப்பாக்கிக் கட்டையால் கோவிந்தராஜூவின் நெற்றியைக் குத்தினன். பிறகு, 'ஒழிந்தான் !’ என்று கத்தினர்களோ என்னவோ உற்சாகத்துடன் அந்த ஈனக் கூட்டம் அகன்றது. சரியாக அரைமணி. கோவிந்த்ராஜூ மெதுவே கண்விழித்தான்; அவனுக்கு நடந்தது பூராவும் ஒன்றுவிடாமல் தெரியும்: . . . . அவன் சாகவில்ல்ை. எதிரி சுட்ட குண்டுக்கு இலக்காகாமல் அவன் பத்திரமாக ஒதுங்கிக்கொண்டுதான் இருந்தான். அவர்கள் அவனே நோக்கி முன்னேறி வந்ததும் குண்டு பட்டவன்போல் படுத்துவிட்டான். . . . - - ஆனால் அவனுக்குப் புரியவில்ல்ை, எவ்வாறு, அந்தக் கூட்டம் அவனது பாசாங்கை நம்பிவிட்டது என்று. - 爱。” நெற்றியைத் - தடவிக்கொண்டவன் கையைப்பார்த்தான். அறப்படுமுன்னர் இட்டுக்கொண்ட குங்குமம் அழிந்து கையில் ருந்தது.