பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ. ரா. சுந்தரேசன் 44.1 நெற்றியில் அகலமாய் அப்பியிருந்த இந்தக் குங்குமத்தைஎன் முத்தம்மா கொடுத்த குங்குமத்தை பார்த்து எதிரிகள், நெற்றியில் குண்டு பட்டு நான் இறந்துவிட்டதாக நினைத்து விட்டார்கள் போலும். ஒரு சீனன் துப்பாக்கிக் கட்டையால் நெற்றியில் குத்தியதற்குக்கூட இதோ காயம் என்று சுட்டிக், காட்டத்தான் இருக்குமோ ? உள்ளம் பொங்கி உவகை நிறைந்தது கோவிந்தராஜூவுக்கு. 'அஹமத் உனக்கும் என் நன்றி' என்று அவன் மகிழ்ந்தான். உயிர் பிழைத்த மகிழ்ச்சியோடு, இப்போது இன்னுமொரு மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. சீனத் துருப்புக்கள் போட் டிருந்தபடை முகாமுக்கு அருகில் அவன் இருந்தான். இந்தியர்களைப் பின்வாங்க வைத்துவிட்டோம் என்ற வெற்றி மதர்ப்பில் சீனர்கள் தங்கள் முகாமில் குடித்துக் களித்துக்கொண் டிருந்தனர். "நமது படைதான் இந்தியர்களை விரட்டிக்கொண்டு பதினைந்து மைல் தொலைவில் போரிட்டுக் கொண்டிருக்கிறதே?” என்று நினைத்து மனச்சாராயம் குடித்துக்கொண்டிருந்த முகாமில் படீல் படில் படில் எனச் சரமாரியாக பத்துப் பதினைந்து குண்டு கள் வெடித்தன. முகாம் முழுவதும் ஒரே தீ அங்கிருந்த நூற் றுக் கணக்கான சீனர்களில் இறந்தவர்கள் போக மற்றவர்கள் நிலைகலங்கி அலறிக் குழம்பிப்போய் முகாம்களை விட்டு ஓடினர். ஒடும் அவர்களை நோக்கி இருளிலிருந்து மீண்டும் ஒரு எறி குண்டு எறியப்பட்டது. முத்தம்மா! உனக்காக, நீ சொன்னயே, "என் பெயரைப் சொல்லிப் பத்து சீனனைக் கொல்லுங்கள்' என்று, அதை நிறைவேற்றி விட்டேன்,' என்று மனத்திருப்தியுடன் கூறிக்கொண்டான். கோவிந்தராஜு.