பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமதி சுப்பிரமணியம் 44 சட்டத்திற்கு வாழ்க்கைப்பட்டவள் கண்களில் பொங்கிய கண்ணிரை மேல் துண்டால் துடைத் துக் கொண்டார் நீலமேகம்: 'நேற்றுப் பிறந்த புயல்...என்னை மீறி அவல்ை செய்யவும் முடிந்ததே ! ' அவரது நெஞ்சு குமையவில்ல்ை: குமுறிற்று. சட்டம் துணை நிற்கிறது. ஏன் அவராலே அதைச் செய்ய முடியாது? எல்லாம் முடியும்...' பார்வதி முந்தானேயால் கண்களைத் துடைத்துக்கொண்டே கூறிள்ை. 'இந்தா, நீ ஏன் அழவேண்டும்? உடன் பிறந்த எனக்கே ஏற்படாத பரிதாபமா உனக்கு ஏற்பட்டுவிட்டது? கழுதை போகி முள் தன் விதிப்படி... 鑫等 இருந்தாலும் பெண்ணுக்குப் பெண். இனிமேல் சாரதா நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தானே இருக்கிறது?" "அவளாக விரும்பி ஏற்றுக்கொண்டது தானே ? இதற்கு நாம் என்ன பண்ணுவது? நீ போய் உன் வேலையைப் பார். ' நீலமேகம் பேச்சைச் சுருக்கிக் கொண்டார். கணவரின் அமைதியான தனிமைக்கு இடையூருக நில்லாமல் அங்கிருந்து அகன்றுவிட்டாள் பார்வதி. நீலமேகத்தின் மனம் அமைதியையா அனுபவித்தது ?