பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமதி சுப்பிரமணியம் 443 எதிர்வீட்டில் சிரிப்பும் கொம்மாளமும் சதிராட்டம் போட் டுக் கொண்டிருந்தது. சீரழிவுக்கு வித்திடும் சிரிப்பு அங்கே அலைமோதிக் கொண்டிருந்தது. இங்கே சீறிப் பாயும் நெருப்பு நீலமேகத்தின் நெஞ்சில் சுழல் வட்டமடித்தது. மிகவும் குறுகிய தெருவாதலால் எதிர்வீட்டு நிகழ்ச்சிகள் நீலமேகத்துக்குத் தெளிவாகத் தெரிந்தன. நல்ல உள்ளங்களில் நஞ்சைப் பதியமிடும் நச்சுப் பாம்புக் கூட்டம் சுற்றிச் சூழ்ந்திருந்து சரவணனைப் பாராட்டிக்கொண் டிருந்தது. ' என்ன இருந்தாலும் நீ கெட்டிக்காரன்தானப்பா, சரவணு உன்னைவிடப் பெரியவர்களெல்ல்ாம் உன் தங்கை படும் கொடுமை யைப் பார்த்திருந்தும் பாராதிருந்துவிட்ட வேளையிலே நீ செயலில் இறங்கி வெற்றியும் பெற்று விட்டாயே...' என்று போற்றிக் கொண்டிருந்தார், முன்னேற்றப் பாதையிலே வெகு வேகமாய்ச் சென்றுகொண்டிருந்த நண்பர் ஒருவர். ' வயதிலே மட்டும் பெரியவராக இருந்தால் போதுமா ? செயலுக்கல்லவா வயது வளர வேண்டும்?' என்று நண்பனுக்கு மற்ருெரு பாராட்டு மாலையை அணிவித்தான் தங்கத்துரை. ' கங்கிராஜுலேஷன்ஸ் கேளிலே வெற்றி பெற்றுவிட்டா யாமே, ' என்று கை குலுக்கியவர்கள் இரண்டொருவர். சத்தியத்தைச் சாட்சி வைத்து நடத்திய கல்யாணத்தை, சட்டத்தின் மூலம் பிரித்துவிட்டதற்குப் பாராட்டுகிருர்களே ! ஆயிரம் உறவு கூடி, இந்தக் கல்யாணத்தை நடத்திவைத்த வர் அவர் ஆல்ை இந்தப் பயல் சரவணன் ஒருவகை நின்று விடுதலை வாங்கித் தந்து விட்டான். நீலமேகத்தின் கண்களிலே நீர் துளிர்த்து வடிந்தது. நெஞ் சிலே ரத்தம் துளிர்த்துக் கசிகிறது. சரவணனின் வீரத்தைப் பாராட்ட அவனையொத்த மனப் போக்குப் படைத்த நண்பர்கள் வந்தார்கள்: மனதாரப் பாரட், டிஞர்கள். அவன் கொடுத்த கலரையும், காப்பியையும் பருகிய வர்கள் விடைப்பெற்றுப் போகும்பொழுதும் மறக்காமல் அவ. னது வலிமைல்யப் பாராட்டிச் சென்றர்கள். - போகுமுன்னதாக, சுதந்திரம் பெற்று நின்ற மங்கை சாரதா வையும், சற்று உரிமையைப் பார்வையில் தேக்கிப் "تلفنون சென்ருர்கள்; இந்த அவலத்தை அவளும் உணர்வில்ல்ை: 母