பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 சட்டத்திற்கு வாழ்க்கைப்பட்டவள் அவளுக்கு விடுதலை வாங்கித் தந்த சின்ன அண்ணன் சரவண னும் உணரவில்லை. ஆனல், தெருவில் எதிர்ச்சாரி வீட்டின் ஜன்னல் கம்பிகளி னூடாக, தம்பியின் வீட்டிலே நடக்கும் அவலத்தைக் கண்டும் தடுக்க முடியாத கையாலாகாத்தனத்தை நினைத்துப் பொங்கிப் பொருமி நின்ற நீலமேகம் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். அவர் நெஞ்சம் கொல்லன் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது. உருகியோடும் இரும்புச் சூட்டிலே பாதம் பதித்து நடப்பவரைப் போலத் துடித்தார். சரவணனும், சாரதாவும் அவரைவிட வயதில் சிறியவர்கள்...ஆனல், செய லிலே மிகப் பெரியவரின் செயலையும் மிஞ்சிவிட்டார்களே சே... ! - தெய்வத்தைச் சாட்சியாக வைத்து, தெய்வ மனம் படைத் தவர்கள் ஆசீர்வாதம் பெற்று, மங்கல நாண் முடித்துப் பிணத் துக் கொண்ட உறவை, கோர்ட்டார் முன்னிலையில், கொடியவர் கள் சாட்சியுடன் விடுதலை வாங்கித் தந்து விடுவதாமே... நீலமேகத்தின் நெஞ்சு வெடித்துச் சிதறி விடாதிருக்கத் தன் கரங்களை மார்பிலே புதைத்துக் கொண்டார். அவர் நினைவு எங்கெங்கோ மூழ்கி எதையெதையோ தேடி எடுக்க முனைந்தது. சட்டத்தின் மூலம் அவன் உறவைப் பிரிக்கலாம்; அவனது நினைவை அழிக்கவே முடியாது, என்ற முடிவிலே தான் வந்து நின்ருர், நாலைந்து மாதங்களுக்கு முன்னுல் சாரதா கணவனோடு கோபித்துக் கொண்டு தன் வீடு தேடி வந்த போது நீலமேகம் அவளை வரவேற்கவில்லை; வாழ்த்தவுமில்லை, - கணவனைப் பகைத்துக் கொண்டு ஓடிவருவது சாரதாவுக்கு அது முதன் முறையுமல்ல; முடிவான முறையுமல்ல: விவாகமான சில நாட்களில் தொடங்கிய பழக்கம், அவளைப் பொறுத்தவரை ஒரு விளையாட்டுப் பொழுது போக்காகவே ஆகிவிட்டது. கணவனிடம் காணும் சின்னஞ்சிறு குற்றங்களை யெல்லாம் பெரிதாகப் பாராட்டிக் கொண்டு அவைேடு பெரும் போராட்டமே நடத்தி முடித்து முடிவில், ! உன் தயவே தேவை யில்லை என்று அண்ணன் வீட்டிற்கு ஓடி வந்து விடுவாள். உண்மையை உணராத நீலமேகம், தங்கையின் கண்ணிருக்கு மதிப்புக் கொடுத்து மைத்துனரைக் கண்டிப்பார்: காலம் போகப் போகத் தவறு எங்கே பிறக்கி றது என்பதைப் புரிந்துகொண்டார் நீலமேகம், தங்கையைத் திருத்த முயன்ருர்,