பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அன்னையும் பிதாவும் கொள்ள யாதொரு தடையுமில்லை” என்று அர்த்தநாரி தனக்குள் சொல்லிக் கொண்டான். திடீரென்று, சீ! இப்படி எண்ணுவது மகாபாவம்' என்று யாரோ திட்டியதுபோல் தோன்றிற்று. திரும்பிப்பார்க்க, பங்கஜம் வந்து பின்னல் நின்ருள் விஷயம் தெரிந்துபோயிற்று என்று திடுக்கிட்டான். உடனே மறுபடி மதி தெளிந்தது; சமாளித்துக்கொண்டான். யாரும் பேசவில்லை. தன் மனத்தி லுண்டான பிரமை என்று தெரிந்துகொண்டான். சத்தமில்லாமல் எப்படி வந்துவிட்டாய் ?’ என்ருன். பங்கஜம் நகைத்து, ' கதவை மூன்று தரம் தட்டித் தான் வந்தேன். ஏதோ யோசனையிலிருக்கிறீர்கள் ? நான் வந்தது உங்களுக்குத் தெரியவில்லை என்ருள். " நான் ஊருக்குப் போகவேண்டும். காலரா அதிகமாயிருக் கிறதாம். அப்பா, அம்மாவிற்கு ஏற்பாடு செய்து வரவேண் டும் ' என்ருன். முந்தியே செய்திருக்கவேண்டும். இப்போ நீங்கள் அங்கே போனல் வெகு ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். அவ்விடம் தண்ணிர் குடிக்கக்கூடாது ' என்ருள். அன்றிரவே அர்த்தநாரி சேலம் போனன். ஆனல், சேலத் தில் ரயிலிறங்கி, கோக்கலைக்கு உடனே போகாமல் இங்குமங்கும் காலம் கழித்துவிட்டு நாலு நாட்களுக்குப் பின் போனன். இவன் போவதற்குள் தாயார் இறந்துவிட்டாள். கூடவே ரெங்கனும் பேதி கண்டு அவனும் இறந்துவிட்டான். குடிகாரத் தகப்பன் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து மிஞ்சினன். ' என்னைப் பெங்களுருக்கு அழைத்துப்போ. இனி இங்கே நான் என்ன செய்ய முடியும்? ' என்று தகப்பன் அர்த்தநாரியை மிகவும் கெஞ்சினன். அர்த்தநாரி கேட்கவில்லை. முடியாது’’ என்று ஒரே பிடிவாதமாய்ச் சொல்லிவிட்டான். உனக்கு வேண்டிய பணம் அனுப்புகிறேன். நீ இந்த ஊரிலேயே இரு. என் கூட வரவேண்டாம். அழைத்துப்போக முடியாது’’ என்று சொன்னன். தகப்பன் திக்கற்ற குழந்தை போல் அழு தான. இங்கே என்னுல் இருக்க முடியாது ' என்று சொல்லி விம்மி விம்மி அழுதான். எவ்வளவு அழுதாலும் அர்த்தநாரி கேட்கவில்லை. பங்கஜத்தை விட்டுவிட முடியுமா ? என்று அர்த்தநாரி தனக்குள் சொல்லிக் கொண்டு, தகப்பனர் அழுத