பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 6 சட்டத்திற்கு வாழ்க்கைப்பட்டவள் இப்பிறப்பன்றி, ஏழ்பிறப்பிலும் தொடர்ந்து வருவதாய்க் கூறும் உறவையும் உள்ளத்தையும் கூறு போடவும் முயற்சி தேவைதானே ? சரவணன் ஒருவகைவே நின்று, அந்த முயற்சியில் முனைந்து வெற்றியும் பெற்று விட்டானே ! 拯 வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டிய பெண்மையைக் கோர்ட்டுக்கு இழுத்து விட்டானே-இதை வெற்றியென்று கொண்டாடுகிருர்களே ! நீலமேகம் மனம் புழுங்கிளுர், 米 景 葵 - ஆட்களும் விருந்துமாகத் தடபுடல் பட்டுக் கொண்டிருந்த சரவணனின் வீடு, ஆய்ந்து ஓய்ந்து அமைதிக்குள் அடங்கியது. வீதியிலே மின்னும் ஒளி விளக்குகளின் வெளிச்சத்திற்குத் துணையாக, வானவீதியில் நிலவோனும் பவனி வரத் தொடங்கி விட்டான். . - நீலமேகம் இருந்த அறையிலே, வீதியிலிருந்து வந்து பாயும் ஒளிக்கதிர்களைத் தவிர, வேறு வெளிச்ச மில்லாது இருண்டு கிடந்தது அவரது இதயத்தைப் போல. திடீரென்று மின்சார விளக்குப் பளிச்சிட்டது.

  • அடப் பாவி என்று குமுறிக் கொண்டே ஒளிக்குள் ஒளியாய் வந்து நின்முள் பார்வதி. -

Lడిమా குறிப்பிடும் பாவி யாரென நோக்கிய கணவனிடம் கூறினுள். உங்கள் தம்பியின் நண்பன்-அவன் தான் கூடிக் குடியைக் கெடுக்கும் தங்கதுரை-பேசிச் சென்றதைக் கேட்டேன். என் வயிறு பற்றி எரிகிறது. கடைசியிலே அந்தப் பெண் சாரதாவுக் குக் கிடைத்த கதி இதுதான ?’ என்று விம்மினுள் பார்வதி. ஏன் அழுகிருய்? உன் மைத்துனனும், நாத்தருைம் மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கின்ற வேளையிலே நீ ஏன் கண்ணிர் வடித்துக் கொண்டிருக்கிருய்? என்னைப் பார். நான் எப்ப்டி மகிழ்விலே மிதந்து கொண்டிருக்கிறேன். இதை உன்னல் உணர முடியாது பார்வதி...என்னல் துணிந்து செய்ய முடியாத செயலை என்னேவிடச் சின்னவன் செய்து முடித்துவிட்டானே என்கிற பூசிப்பிலே மிதந்துகொண்டிருக்கிறேன் !”