பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமதி சுப்பிரமணியம் 447 நீலமேகம் அழுகையை அடக்கிக்கொண்டு பொய்யாகச் சிரிக்க முயன்ருர், ' போதும், உங்கள் போலிச் சிரிப்பு போதும். அங்கே உங்கள் தங்கையின் வாழ்க்கையே பாழ்பட்டுச் சிரித்து நிற்கிற வேளையிலே...' " பார்வதி ! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே, இப்போதுதான் அவள் முழு உரிமையும் பெற்ற சுதந்திரவாதி!' அவள் சுதந்திரம் நாசமாய்ப் போகட்டும். அவளுக்குக் கிடைத்த சுதந்திரத்தாலே, அவளது பெண்மையே பறிபோய் விடும் போலிருக்கிறதே !' ' என்ன சொல்லுகிருய் நீ?" ' உங்கள் தம்பி, தங்கைக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த புகழிலே மிதப்பவர்; அந்தப் புகழின் போன்தையிலே மூழ்கி, மேலும் தனக்குப் புகழ் தரக் கூடிய செயலில் இறங்கிவிட்டார்.' ೧ಹT முடியாமல் நெற்றியைச் சுளித்தார் நீலமேகம்: ஆமாம், தன் செயலுக்கு உறுதுணையாய் நின்ற தங்கத் துரைக்குத் தன் நன்றியின் காணிக்கையாகத் தங்கையையே அர்ப்பணிக்க முன்வந்து விட்டார்.” ' என்னது? சாரதாவுக்கு மறுமணமா ?” நீலமேகத்தின் உடலெங்கும் நெருப்பு ஜ்வாலை கொழுந்து விட்டு எரிந்தது, "இப்பொழுதே போய் அவளைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு வருகிறேன்...' கண்களில் ரத்தச் சிவப்புக் கனன்றது. கைகள் தங்கையின் கழுத்தை ஸ்பரிசிக்கத் துடிதுடித்தன. சிறைக்குச் சென்ருலும் பாதகமில்லை. அதனல் தன் மானம் பறிபோனலும் சரி, தங்கை யின் மானம் காக்கப்பட வேண்டும் என்ற வெறியோடு நீலமேகம் எழுந்தார். சற்றைக்கெல்லாம் ஆவேசமான உருவம் ஒன்று எதிர்வீடு நோக்கி விரைந்ததைப் பார்த்து பதறிள்ை பார்வதி. தம்பியின் வீட்டு வாசலில் அவர் காலடி வைத்த வேளை, உள்ளிருந்து சாரதாவின் குரல் பரிதாபமாய்ப் பிரலாபித்தது; அந்தக் குரலில்ே ஆணவம் அடங்கி, அபலைத்தனம் மேலோங்கி ஒலித்தது,