பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துராமலிங்கம் 45 விளக்கேற்ற வந்தவள் “மணம் செய்யாது என்றும் கன்னியாகவே உள்ள பெண் களை, ஆண்கள் சமுதாயம் சற்றுச் சந்தேகக் கண்களுடனேயே பார்க்கும். ஆனல் தமிழ் இனமோ, மணமாகாத பெண்களை அவ்வளவாக மதிப்புக் கொடுக்காததோடு அவர்களைப் பூர்ணத்து வம் பெற்றவர்களாக அங்கீகரிப்பதும் இல்லை’ என்ற இந்த வார்த்தைகளை யாரோ யாருக்கோ சொன்ன வார்த்தைகளாக ஒதுக்கித் தள்ள முடியவில்லை, மிஸ், சாந்தா, எம். ஏ., அவர் களால்: கோமதி ஈஸ்வரர் பெண்கள் கல்லூரியின் பிரின்ஸ்பால் சாந்தாவின் உள்ளமும் சிந்தனையும் இந்த வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பித்ததே சென்ற இரண்டு ஆண்டுகளா கத் தான், - இருபத்து மூன்ரும் வயதில் எம். ஏ. பட்டம் பெற்ற சாந்தா, இரண்டு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்த பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக கல்லூரி பிரின்ஸ்பாலாக பணிபுரிந்து வருகிரு.ர். பிரபல வழக்கறிஞர் ரத்தினவேல் முதலியாரின் மூத்தமகளான சாந்தாவுக்கு, இரு சகோதரர்களும் ஒரு சகோதரி யும் உண்டு. சகோதரர்கள் இருவரும் வழக்கறிஞர்களாகப் பெரும் புகழும் பணமும் பெற்று வாழ்ந்து வந்தனர். சகோதரிக்கு மணமாகி மூன்று குழந்தைகளும் இருந்தன. ஆனல் எல்லோருக் கும் மூத்தவளான சாந்தா மட்டும் மணம் ஆகாத கன்னியாகவே இருக்கிருள். கல்லூரியில் படிக்கும் பொழுது படிப்பில்ை ஏற்பட் டுள்ள கர்வத்தில்ை ஆண்களே அலட்சியம் செய்தாள். ஒருவன மணந்து கொண்டு அவனுக்கு மனைவியாக அவனது ஆசாபாசங் களுக்கு, கட்டுப்பட்டு அடங்கி நடக்க அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. உணர்ச்சிகளை அடக்கி வாழ்வு முழுவதும்