பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துராமலிங்கம் 451 வடுப்படாத கன்னியாகவே வாழ ஆசைப் பட்டாள்; வாழ்ந்தும் வந்தாள் கடந்த பல ஆண்டுகளாக. முப்பத்திரண்டு வயதைத் தாண்டிய அவளது உள்ளத்தில் மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகம் ஏற்பட்டதேயில்லை. பருவத்தின் கொந்தளிப்பு அவளைப் பல முறை வாட்டி வதக்கிய போதெல் லாம், மகாத்மா காந்தியடிகளின் பிரம்மச்சரிய ஆலோசனை கள் அவளது சுய உணர்வைத் தட்டி எழுப்பி நேர்மைப் பாதை யில் அவளே அழைத்துச் செல்லும், அன்ன நடை, பின்னல் சடை, வண்ண உடை, சின்ன இடை, -இவை அவளிடம் இன்னும் இருந்தன. புன்னகை புரியும் சந்திர வதனம், கயல் கண்கள், கட்டமைந்த மேனி, பொன்னைத் தோற்கடிக்கும் பளபளப்பான நிறம் இவை அவளை விட்டுச் செல்லவில்லை. பசுமை மறைந்து காய் கனியானதும் உள்ள கவர்ச்சி, சுவைக்கப்படாத கனியின் ஈர்ப்பு, அவளிடம் சரண டைந்தே இருந்தன. அவளது பள்ளிப் படிப்பிலே பார்த்து மயங்கியவர் பலர், கல்லூரி வாழ்விலே கட்டிளம் காளையரின் அம்புவிழிகள் பல அவளைத் தாக்கி உள்ளன. விரிவுரையாள ராகப் பணிபுரியும் பொழுதும், பிரின்ஸ்பாலான பிறகும் பல உயர்தரமானவர்களின் பார்வையின் ஈட்டி அவளை நோக்கி வீசப்பட்டதுண்டு. ஆனல் எந்த அம்பு விழிகளோ, பார்வை ஈட்டிகளோ அவளது மூடிய இதயக் கோட்டையின் முன் செய லற்றுத் தான் போயின. எட்டாத உயரத்தில் அவள் இருப்ப தாக எண்ணிக் கொண்டனர், அவளை நாடினர். ஆம், அவளும் எட்டாக் கனியாகவே தான் இருந்தாள். அப்படி இருக்கத்தான் ஆசைப் பட்டாள். ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் மணம் செய்து கொள்வதற்காகவே பிறக்கவில்லை. பி ர ம் மச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு பாரதப் பூமிக்குப், பெருமை தேடித் தரப் பிறந்தவளே என்ற காந்தியடிகளின் பொன் மொழியை அடிக்கடி தன் மனத்தில் எழுதிப் படித்துப் பார்த்துக் கொள்ளுவாள். இந்த ஆண்டு, கல்லூரி தமிழ்ப் பேரவையின் கூட்டத்திற்கு பிரபல பேச்சாளர் கோபாலன் அழைக்கப்பட்டிருந்தார். பிரபல கதாசிரியர். பெரிய பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியர். தூயதமிழில் மடைதிறந்த வெள்ளம் போன்று பேசும் இயல் பினர். காந்தியக் கருத்துக்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர்; முப்பது வயது குறுக்கிப் பிடித்துள்ள இளைஞர். பார்ப்பதற்குக் கம்பீரமான தோற்றம் கொண்டு இருந்ததே போல், கம்பீரமான பேச்சு வன்மையும் அவரிடம் அடைக்கல மடைந்திருந்தது. தமிழ்ப் பேரவையிலே முழங்கினர். அவரது முழக்கத்தின் ஒலி அலைகள், தன் அறையில் அமர்ந்திருந்த சாந்தாவின் செவிகளை மெதுவாக எட்டின. அந்த ஒலியின் முதல் அலேயே அவளை