பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துராமலிங்கம் 锂莎3 மனத்தின் ஆழத்தில் கோபாலனைச் சந்தித்ததில் இருந்து பதிந் தது. துணை வேண்டாம் என்ற அவளது வைராக்கியம், மட மடவெனச் சிதைந்து, அறிவின் அஸ்திவாரத்துடன் அவள் கட்டியிருந்த வைராக்கியக் கோட்டையைத் தகர்த்து விட்டது: அவளது ஆசையின் கொடும் தாக்குதலைத் தன்னல் இயன்ற மட்டும் தடுத்து நிறுத்தப் போராடிற்று. அவள் கொண்ட வெறி ஆசை, வெற்றிபெற, அறிவும், உள்ளக் கட்டுப்பாடும், தோல் வியை அணுகிக்கொண்டே வந்தன. தன் உள்ளம் பேதலிக்கும்பொழுது எல்லாம் மன அமைதி யையும், தெளிவையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த மகாத்மாவின் பிரம்மச்சரியக் கொள்கைகள் இப்பொழுது பலன் கொடுக்கவில்லையே என்று மனம் புழுங்கிளுள். புதியதாகச் சஞ்சலமுற்றுவிட்ட அவள் உள்ளம் அவளைக் கோழை என்று குற்றம் சாட்டிற்று. குடும்பக்காரியங்களிலும், தன் தங்கைக்கு இருந்த செல்வாக்கு, தனக்கு இல்லை என்பதை உணரப் பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. சாதாரண வெறும் உடல் உணர்வு என்று எண்ணிக் கேலி செய்து கொண்டிருந்தாளே, தாம்பத்ய உறவு, அந்த உறவு எவ்வளவு தெய்வீகமானது என்பதைப் படிப்படியாக அவள் மனம் உணர்ந்தது. யாருக்கும், பலனில் லாது காட்டில் அடித்த நிலவாய், பாலைவனத்தில் வீசிய தென்றலாய்த் தன் வாழ்வு நடந்து வந்திருப்பதை அடிக்கடி எண்ணிப்பார்த்தாள். அவள் உள்ளம் துணை தேவை ...... * துணை தேவை என்று ஓங்கார மிட்டது. அந்த ஓங்காரத்தின் ஒலி அவளது நாடி நரம்புகளிலெல்லாம், தசை அணுக்களிலெல் லாம், பிரதிபலித்தது. - அவனைத் தேடிச்சென்று பேசிள்ை. அன்பு செலுத்தினள். அவளது அன்பு உள்ளத்தின் செய்கையில் அவன் திக்குமுக்காடிப் போனன். அவன் வேண்டாம் என்று மறுத்தும் அவனது பொருளாதாரத்தைப் பெரிதும் பெருக்கினுள். பொருளாதாரத் தில் தனக்குச் சமமாகக் கொண்டுவந்துவிட ஆசைப்பட்டாள்: கொண்டுவந்தும் விட்டாள். பிரின்ஸ்பால் தன்னை விரும்புகிருள் என்பதை அறியும் பொழுது நடைமுறை நிகழ்ச்சிகளை அவளுல் நம்பவே முடிய வில்லை. ஆனல் அவனது அன்பிற்கு ஏங்கிய அவளது ஒவ்வொரு செய்கையும் அவளை முழுவதும் அவனிடம் சரணடைய வைத் தது. அவனிடம் அவள் வாழ்வுத் துணையைக் கண்டாள்; மீண்டும் Dಣಕ சாட்சி குமுறிய பொழுது, தற்செயலாக - அன்றுவந்த ஒரு தினசரிப் பத்திரிகையில் வெளியாகி இருந்த மகாத்மாவின் பொன்மொழி அவள் கண்களில் தென்பட்டது.