பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 - விளக்கேற்ற வந்தவள் காம உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியாத ஒருவர் திருமணம் செய்து கொள்வது தவருனதல்ல’’ என்ற பொன் மொழி அவள் மனச்சாட்சியின் குமுறலை அடக்கி விட்டது. மீண்டும் அவள் கைகள் காந்தியடிகளின் பிரம்மச்சரிய நூலை எடுத்துப் புரட்டின. நிலைக்கண்ணுடி முன்பு, எந்தத் தோற்றத்துடன் நிற்கி ருேமோ, அந்தத் தோற்றமே நிலைக்கண்ணுடியில் பிரதிபலிப்பது போன்று முன்பு அவளது பிரம்மச்சரியக் கொள்கைகளுக்கு ஊக்கம் கொடுத்த அதே நூல், இன்று அவளது திருமண ஆசை களுக்கு ஊக்கம் கொடுப்பது போன்று தோன்றிற்று. ஆடம்பரமற்ற முறையிலே கோபாலனைத் தன் கணவராக, ஆலயமணி ஒலிக்கும், அறிந்தவர்களின் ஆசி வார்த்தை ஒலிக்கும், நாதஸ்வர இன்னிசை ஒலிக்குமிடையே, ஏற்றுக் கொண்டாள் சாந்தா. அவளது வீழ்ச்சியைச் சிலர் கேலி செய்தாலும் வயது சென்ற, அவள் பெற்ருேரும், தம்பிகளும், தங்கையும், மனப் பூர்வமாக ஆதரித்தனர். வீழ்ச்சியாகச் சிலர் சொல்ல, வாழ்வு மலர்ந்ததாக அவள் உள் மனம் கூத்தாட இன்ப இசை பரவிற்று அவர்கள் வாழ்க்கையிலே, அவர்கள் இருவரின் திருமண வாழ்த்துக்களிடையே மகாத்மாவின் இல்லறமும் பிரம்மச்சரியமும் ' என்ற நூலும் இருந்தது அவளுக்கு ஒரு வியப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. இல்லறத்தில் இருந்து கொண்டே பிரம்மச்சரியத் தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டாள் தனக்குள்ளாகவே, ー○★○ー