பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜி 29 தைக் கவனிக்கவில்லை. மறுநாள் அர்த்தநாரி தகப்பனர் கையில் ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டுச் சேலம் போய்விட்டான். - 6 "என்ன செய்து விட்டேன் பெற்ற தாயையும் அண்ண னையும் கொன்று விட்டேன். ஏன் இப்படிச் செய்தேன்? என் னைப்போல் ஒரு பாவி உலகத்தில் உண்டா ? தகப்பனை இப்படி நான் தள்ளிவிடலாமா? பங்கஜத்திற்கு என்ன சொல்வேன் ? ’’ இவ்வாறு பல எண்ணங்களில் மூழ்கி ரயிலில் தூக்கமில்லா மல் அர்த்தநாரி பெங்களுர் போய்ச் சேர்ந்தான். மயக்கம் தட்டின மாதிரி ரயிலடியிலிருந்து வீட்டுக்குக் கால்நடையாகவே போனன். படுக்கை சாமான்களை ஒரு வண்டியில் வைத்து வீட் டுக்குக் கொண்டுபோகச் சொல்லி, தான் நடந்து சென்ருன். வீட்டுக்குப் போய்க் கதவைத் தாள் போட்டுக் கொண்டு படுத்தான். கோவிந்தராவுக்காவது பங்கஜத்திற்காவது தான் திரும்பி வந்த சமாசாரம் சொல்லியனுப்பவில்லை : ஆபீசுக்கும் போகவில்லை. ராத்திரி மூட்டைகட்டி, ஒருவருக்கும் சொல்லாமல் மறுபடி யும் ரயிலுக்குப் போய்ச் சேலத்திற்கு டிக்கட்டு வாங்கின்ை. சேலம் போனதும், கோக்கலையில் ஒர் ஆதித்திராவிடன் கிணற்றில் விழுந்து செத்துவிட்டதாகச் சிலர் பேசிக்கொண் டிருந்த சங்கதி அவன் காதில் பட்டது. கோக்கலை சேர்ந்த தும், இவ்வாறு செத்துப்போனது தன் தகப்பன் தான் என்று தெரிந்தது. போலீஸ் ஸ்டேஷனில் பிரேதத்தை வைத்து எழு திக் கொண்டிருப்பதாக யாரோ சொன்னர்கள். ஆனல், அவ் விடம் போகாமல், சேலம் திரும்பிப்போய், மறுபடியும் ரயில் ஏறிஞன். - பங்கஜம், நீ என்னைப்பற்றி இனி மறந்துவிட வேண் ரும் ' என்ருன் அர்த்தநாரி. - மறந்து விடலாம் பின்னே, இப்போது ஊரில் என்ன சமாசாரம் சொல்லுங்கள் ' என்ருள் பங்கஜம். எல்லாரும் இறந்து விட்டார்கள் : நான் செய்ய வேண் டியதைச் செய்யாததால் இறந்துவிட்டார்கள், பங்கஜம் ! எனக்கு வாழ்வு பிடிக்கவில்லை. உத்தியோகத்தை விட்டுவிட்டு ஊருக்குப் போகிறேன். நீ என்னை மறந்து விடவேண்டும் ! " என்ருன். -