பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். அப்துல் வஹ்ஹாப் 46 உண்டி கொடுத்தோர் "யார்? மகுதூம் மியான, அஸ்ஸலாமு அலைக்கும், ஏது இவ்வளவு தூரம்?' என்று வரவேற்றவாறு வந்திருந்த அந் நண்பர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். நல்ல வேளை அவர் போர்க் கோலம் பூண்டிருக்கவில்லை. உலகத்தில் நிலவும் கொடுமைகள், நடக்கும் ஒழுங்கீனங்கள், இழைக்கப்படும் அநீதிகள் அனைத்துக்கும் எதிர்க் குரல் கொடுத்து, போர் முஸ்தீபு செய்பவர் என் நண்பர். யார் எந்த அபிப்பிரா யம் தெரிவித்தாலும் அதைப் பரிசீலனை செய்யாது ஏற்றுக் கொள்ள மாட்டார். அந்நேரத்தில் அபிப்பிராயம் சொல்பவரின் அந்தஸ்தைப் பற்றி அக்கரைப்பட மாட்டார். ஆற்முெழுக் கோடு நீந்திச் செல்வது தான் காரியம் சாதிப்பதற்கு வழி என்று நம்பிச் செயலாற்றும் பெரும்பான்மை மக்களிடையே, எப்பொழு தும் எதிர்நீச்சல் போட்டே பழக்கப்பட்டவர். ' போர்ச் சேவல் ” என்று அவருக்கு நண்பர்கள் சூட்டிய பட்டம் பொருத்த முடையது தான் ! ஆனல் அன்று அவ்ர் முகத்தில் போராட்டத்தின் அறிகுறியே தென்படவில்லை; - - 'பாய் ! உங்களுக்கு முன்ஷி முத்துசுந்தரத்தைத் தெரி யுமா ?' என்று கேட்டார். - முன்ஷி முத்துசுந்தரமா ? கேள்விப்பட்ட பெயராக யிருக் கிறதே ? அரசியலில் அவர் பெயர்......!’ ' வஸ்தஃபிருல்லாஹ்! அவர் அரசியலுக்கு முழுக்குப் போட் டுக் கால் நூற்ருண்டுக்கு மேலாகிவிட்டதே அரசியல் ஓர் அங்காடி அங்கே விற்பவர்கள் எத்தர்கள்: வாங்குபவர்கள்