பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 உண்டி கொடுத்தோர் குருடர்கள் என்பது அவருடைய பொன்மொழியாயிற்றே : என்று சொல்லிச் சிரித்தார் மகுதூம் மியான். ' இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அவருடைய பூர்வா சிரமம் அரசியல் தான். பிறகு ஏதோ அதிருப்தி கொண்டு அரசிய லில் இருந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும் !" என்று குறிப்பிட்டு அவர் 1942ம் ஆண்டில் சிறைக்குச் சென்றிருந்ததையும் நினைவு படுத்தினேன். அவரே தான் ! கூட்டுறவு இயக்கத்தில் காந்தியப் பொருளாதாரம் ' என்னும் பொருள் பற்றி ஆராய்ச்சி நடத் திக் கொண்டிருக்கிறேன். முன்ஷி முத்து சுந்தரம் காந்தியப் பொரு ளாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எனவே அவரைச் சந்தித்து இது பற்றி உரையாடிவிட்டு வரலாம் எனக் கிளம்பி னேன். நீங்களும் வருகிறீர்களா?' என அழைத்தார்: பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சீர்படுவது தான் மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு முதற்படியாக அமையும் என்னும் கருத்தில் கவனம் செலுத்தி வந்த நான் நண்பரின் அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அவரோடு புறப்பட்டேன். 景 彎 응 "அப்பா சாப்பிட்டுக் கொண்டிருக்கிருர் : ஒரு நொடியில் வந்து விடுவார், ’’ என்று மலர்ந்த முகத்தோடு வரவேற்ற அவரு டைய பையன் முன் அறையில் எங்களை உட்கார வைத்தான். விசாலமான அந்த அறையை நோட்டமிட்டேன். ஒர் எழுத்து மேஜை, நான்கைந்து நாற்காலிகள், தவிர தட்டு முட்டுச் சாமான்களேயில்லாமல் வெறிச்சென்று இருந்தது அந்த அறை: ' உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், ’’ என்பதை 'உண்பது நாளுழி, உடுப்பது ஒரே முழம் ' என்று மாற்றிக் கொழுத்த உடலும், குறைந்த உடையும் கொண்ட சினிமா நட்சத்திரங்களின் படங்கள், வலுவிலே புன்முறுவலை வரவழைத் துக் கொண்டு போஸ் கொடுத்து நிற்கும் அரசியல் தலைவர் களின் சித்திரங்கள்; பாமர ரசனைக்காக, சமயத் துறையைப் பொழுதுபோக்குக் களங்களாக்கும் மதத்தலைவர்களின் ஒவியங்கள் ஆகியனவையுமே அறைச் சுவர்களை அணி செய்யவில்லை; மாருக பொன்மொழிகள், கருத்துரைகள் தாங்கிய பல பலகைகள் சுவர் களில் பொருத்தப்பட்டிருந்தன. 'உலகத்தின் வயதோடு ஒப்பிடும் போது, நம் ஆயுள் ஒரு கணம் : அதைப் பேச்சிலே வீணுக்குவதா ?' என்று அரசியல் வாதிகளே அதிர்ச்சியடையச் செய்யும் பொன்மொழி நீண்ட பலகையொன்றில் பொறிக்கப்பட்டிருந்தது.