பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்துல்வஹ்ஹாப் 457 இந்த ஒன்று தவிர மற்றப் பலகைகள் எல்லாம் பசிப் பிணி யின் கொடுமையையும் அதைப் போக்குவதின் புண்ணியத்தையும் விளக்குவனவாக இருந்தன. 'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம், ' என்று பாரதி ஒரு சுவரில் பறை சாற்றிக் கொண்டிருந்தார்; - " அற்ருர் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்ருன்பொருள் வைப்புழி' என்று வள்ளுவர் ஒரு சுவரில் முழங்கிக் கொண்டிருந்தார்: முத்துசுந்தரம் உட்காரும் நாற்காலிக்கு மேலே ' ஏழைக்கு ரொட்டியின் உருவிலே தான் கடவுள் காட்சியளிக்கிருர்,' என்னும் காந்திஜீயின் பொன்மொழி கதர்த் துணியில் எழுதப் பட்டு சட்டம் மாட்டி வைக்கப்பட்டிருந்தது : அந்த அறையின் தோற்றத்தையும், அதில் காணப்பட்ட பொன்மொழிகளையும் கண்ட நண்பர் மகுதூம் மியானுக்குத் தாம் இங்கு வருவதில் எடுத்துக்கொண்ட சிரமத்துக்குப் பயன் கிடைக்கும் என்ற உள்ள நிறைவும், உறுதியும் ஏற்பட்டு இருக்க வேண்டும்: 'பாய்! எந்தப் பொன்மொழியை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் ' என்று காரிய சாதனையின் மகிழ்ச்சி, குரலில் தொனிக்கக் கேட்டார். - 'அதாவது, காந்திp......” என்று நான் என் பதில்ை முடிக்கும் முன்னர், ' காந்திpக்கு என்ன ?' என்று கேட்டுக்கொண்டே முன்ஷி முத்துசுந்தரம் உள்ளே நுழைந்தார். தலை தும்பைப் பூவைப் போல் நரைத்து, முகத்தில் சுருக்கங் கள் விழுந்து, முதுமை உடல் முழுதும் தன் கோலங்களே இழைத் திருந்த போதிலும், அவருடைய பார்வையில் ஒர் ஒளி, குரலில் ஒரு காம்பீர்யம், நடையில் ஒரு தெம்பு இருக்கத்தான் செய்தது: ' காந்திஜீயின் பொன்மொழியைப் பார்த்ததும் எனக்கு அருமையான வரலாற்று நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வந்தது. பசிப் பிணியில் இத்துணை அக்கரை செலுத்தும் தாங்கள் அதைக் கேட்க ஆசைப்படுகிறீர்கள் என்றே எண்ணுகிறேன், என என் பாயிரத்தைத் துவங்கினேன். நண்பர் மகுதூம் மியான் சிரித்துவிட்டார். பாய் ! கதை சொல்வதற்கு உங்களுக்கு ஏதாவது வந்து நினைவூட்ட வேண்டுமா என்ன? நீங்கள் தான் ஸெல்ப்-ஸ்டார்டர்