பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 உண்டி கொடுத்தோர் (Self-starter) ஆயிற்றே ! ஹல்ம் சொல்லுங்கள், ’’ என்று கூறிக்கொண்டே உலகத்தின் வயதோடு ஒப்பிடும் போது, நம் ஆயுள் ஒரு கணம்........ .."என்னும் பொன் மொழியை அர்த்த புஷ்டியோடு பார்த்தார், அந்தப் பக்கமே கவனிக்காதவன் போல் நான் கதையைத் துவங்கினேன். ஹஜ்ஜீக் காலம். இறைவனின் வணக்கத்துக்காகப் பூவுலகில் முதன் முதலில் நிர்மாணிக்கப்பட்ட கஃபத்துல்லாஹ் என்னும் புனிதப் பள்ளி வாயிலைச் சுற்றி மனித வெள்ளம் அலைமோதிக் கொண்டிருந்தது. புனித மிக்க இப்பயணத்துக்கென உலகின் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வந்திருந்த யாத்ரிகர்கள் உருகிப் பாயும் உள்ளமும், பெருகிப் பாயும் கண்களும் கொண்டவர்களாக மெய்மறந்து இருந்தனர். இஸ்லாமிய சமயக் கட்டளைகளில் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிய இதய உணர்வு ஒவ்வோர் உள்ளத்திலும் மலர்ந்திருந்தது. 'லப்பைக்க அல்லாஹாம்ம, லப்பைக்க அல்லாஹும்ம ' என்று அந்த ஹாஜிகள் முழக்கிய முழக்கம் மக்காவின் பெருவெளிகளில் காற்ருேடு கலந்து, ஆத்மீக மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஹஜ்ஜின் பாக்கியத்தைத் தனக்குத் தந்த தலைவனின் பேரருளை நினைத்துக் கொண்டே வெண்மணலில் அமர்ந்திருந்தார் கள் துன்னுான் மிஸ்ரீ என்ற இறைநேசச் செல்வர். பல்லாயிரக் கணக்கான மக்கள் எத்தனையோ இன்னல்களை இன்முகத்தோடு ஏற்று, இந்தப் புனித யாத்திரையின் நிமித்தம் இங்கே வந்திருக்கிருர்கள். ஆனல் எல்லோருடைய ஹஜ்ஜையுமா மாற்றுக் குறையாததாக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிருன். பல்லாயிரத்தில் ஒன்று அப்படி பாக்கியம் பெற்றிருக்கும்,' என்று அத்துாயவர் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அசாதாரண மான ஓர் ஒலி அவர்கள் செவிப்பறையைத் தட்டிற்று.

  • " துன்னுரன் இந்தத் தடவை ஒருவருடைய ஹஜ்ஜை மாற்றுக் குறையாததாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்,' என்று தெளிவாகக் கேட்டது. -

"யா அல்லாஹ் : அந்தப் புண்ணியவான் யார் நான் இப்பொழுதே அவரை சந்திக்க வேண்டும், என்று தங்கள் விருப்பத்தை வெளியிட்டார்கள் மிஸ்ரீ. 'அம் மனிதர் பெயர் அஹ்மது அஷ்காக். திமஷ்கு (டமாஸ் கஸ்) நகரைச் சேர்ந்தவர். ஆனல் அவர் மக்காவுக்கே வர Gಡಿಮೆಶಿನ್ದು!