பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்துல் வஹ்ஹாப் 459 இத்துடன் இறை அறிவிப்பு நின்று விட்டது. மக்காவுக்கு ஹஜ்ஜுக்கென்று வராத ஒரு மனிதரை ஹஜ்ஜு செய்ததாகக் கருதி அதன் பூரண பயனையும் கொடுத்து, அவரை மேம்படுத்தியிருக்கிருன் இறைவன்! இது என்ன விந்தை அச் சீமான் கோடீஸ்வரராகயிருந்து, ஹஜ்ஜுக்குப் போகும் மக்களுக்கெல்லாம் வாரி வழங்கியிருப்பார். எப்படியும் திமஷ்கு சென்று அவரைக் கண்டு வர வேண்டும் ' என்று எண்ணியவாறே பிரயாணத்தைத் துவங்கினர்கள் துன்னுரன் மிஸ்ரீ: செல்வம் கொழித்த திமஷ்கு நகரில் செல்வர்கள் வாழும் வீதிகளில் நடையாக நடந்தார்கள் மிஸ்ரீ, ஆளுல் அந்தத் தெருக்கள் எவற்றிலும் அஹ்மது அஷ்காக் என்ற பெயருடையவர் கிடைக்கவேயில்லை. கடைசியாக ஒரு மனிதர், சகோதரரே ! இங்கு அஹ்மது அஷ்காக் என்று எந்தச் சீமானும் இல்லை. ஆனல் நகரின் கோடியிலே செருப்புத் தைக்கும் ஒரு மனிதர் அந்தப் பெயரோடு இருக்கிருர், விசாரித்துப் பாருங்கள், ' என்று யோசனை சொன்னர். செருப்புத் தைக்கும் அஷ்காக்கைக் கண்டதும் இறைவனின் பாராட்டுதலைப் பெற்றவர் இந்த மனிதராகத் தான் இருக்க வேண்டும், என்ற உள்ளுணர்வு துன்னுரன் மிஸ்ரீயவர்களுக்கு ஏற்பட்டது. தாங்கள் கேட்டவற்றையெல்லாம் அஷ்காக்கிடம் கூறிய துன்னுான் மிஸ்ரீ தாங்கள் ஹஜ்ஜுக்குப் போவதற்காவது நாடியதுண்டா ? எனக் கேட்டார்கள். 兴 娄 警 “LITarr i அதை ஏன் கேட்கிறீர்கள்; அது ஒரு நீண்ட கதை. பல ஆண்டுகளாக எனக்கு ஹஜ்ஜ செய்ய வேண்டுமென்ற ஆசை. பொருள் வசதியில்லாது ஒவ்வோர் ஆண்டும் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இந்த ஆண்டு எப்படியும் ஹஜ்ஜுக்குப் போக வேண்டும் என்று முந்நூறு திர்ஹம் வரை சேர்த்து விட்டேன். பணம் கையில் சேர்ந்ததும் ஹஜ்ஜை நிறை வேற்றி விட்டதாகவே என் உள்ளத்தில் ஒரு பெருமிதம் தோன்றி. விட்டது. . . . . . . . . . . . - , ஆனல் நம் திட்டப்படி என்ன நடக்கிறது, பாவா! ஒரு நாள் பொழுது சாயும் வேளை என் ஒரே மகன் ஏழு வயது நிரம்பப் பெருத பச்சிளம் பாலகன்- விக்கி விக்கி அழுது கொண்டே வந்தான். அவன் தாயும், நானும் பதறிப் போய் அவனைக்