பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்துல்வஹ்ஹாப் 461 னேன். பழைய கதை தான். அரை திர்ஹம் கூடக் கிடைக்க வில்லை. உச்சிப் பொழுது திரும்பும் வேளையில் நகரின் வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன். என் மக்களையும், மனைவியையும் எப்படிப் போய்ப் பார்ப்பேன் என்று நான் வேதனைக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்த பொழுது செத்த ஆடு ஒன்று என் கண்ணுக்குத் தென்பட்டது. அதே நேரத்தில், செத்த பிராணி யைத் தின்னக் கூடாது என்ற கட்டளையும் நினைவுக்கு வந்தது. ஆனால் அன்று என் குழந்தைகள் ஏதேனும் சாப்பிடா விட்டால், அவை துடி, துடித்து மடிந்து விடும் என்பது எனக்கு-நன்ருகத் தெரியும். எனவே மூன்று உயிர்கள் போ வதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பது தான் பெரிய பாவம் எனக் கருதி, அந்த ஆட்டை எடுத்துக் கொண்டு வந்து, கறி சமைத்து, உண்டோம். அந்த நேரத்தில் தான் உங்கள் செல்வத் திருமகன் என் வீட்டுக்குள் வந்து தனக்கும் அந்தக் கறி வேண்டும் என்று அடம் பிடித்தான். நான் தான் ஒரு பாவத்தைச் செய்து விட்டேன். எவ்வளவோ ஆசாரசீலராக இருக்கும் உங்கள் வீட்டுக் குழந்தை யும் அந்தப் பாவத்தைச் செய்வதற்கு நான் உடந்தையாக யிருப்பேன? அந்தப் பையனிடம் எவ்வளவோ எடுத்துச் சொன் னேன். அவன் முரண்டு மிடித்து, சத்தம் போட்டுக் கொண்டி ருந்தான்; மூன்று நாள் பட்டினியின் பலஹீனம், சட்டென்று கோபம் வந்து விட்டது. ஓர் அடி அடித்து விட்டேன். என்னை மன்னியுங்கள், என்று கண் கலங்கி நின்ருர் அம்மனிதர், அவருடைய மூன்று குழந்தைகள் பசியினல் துடி,து டித்து உயிர் விடயிருந்த சோகத்தைக் கேட்டதுமே, என் நெஞ்சம் வெடித்து விடும் போலிருந்தது. வேகமாக வீட்டுக்குத் திரும்பினேன். ஆயிஷா, ஆயிஷா என்று என் மனைவியை இறைந்து கூப்பிட்டேன். பதறிக் கொண்டே ஓடி வந்தாள் என் மனைவி. ஆயிஷா நபிகள் பெருமானர் என்ன சொன்னர்கள், ! அண்டை வீட்டான் பசித்திருக்கத் தான் மட்டும், வயிறு கிரம்ப உண்பவன் என்னைச் சார்ந்தவன் அல்லன் என்று தங்கள் திருவாயால் சொல்லியிருக்கிருர்கள். - 'அண்டை வீட்டிக்காரனும், அவன் செல்வங்களும் பசியால் துடி துடித்துக் கொண்டிருக்க, நாம் வயிறு புடைக்க உண்டு