பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ { அகூடியம் ፴ን 47 ஆத்மதிருப்தி அன்று வெள்ளிக் கிழமை. கோவிலுக்கு ஜனங்கள் கையில் பூத்தட்டுடன் சாரி சாரியாகப்போய்க் கொண்டிருந்தனர்; வனஜாவுக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருந்தது. என்ன ஜனங்கள் ! என்ன குருட்டு நம்பிக்கை !' என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவளுடைய மன்னி கிரிஜா கையில் தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் முதலிய வற்றை எடுத்துக் கொண்டு அர்ச்சனை செய்து வருவதற்காகக் கோவிலுக்குப் புறப்பட்டாள்; அதைப் பார்த்த வனஜாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது; எத்தனையோ படித்த மன்னி கிரிஜாவும் கூட அல்லவா குருட்டு நம்பிக்கையுடன் கோவிலுக்குப் போகிருள்? ' என்று எண்ணிஞள். சிறிது நேரத்துக்கெல்லாம் வனஜா என்ன எண்ணிக் கொண் டாளோ, தெரியாது! அழகாக ஆடை அலங்காரம் செய்து கொண்டு கோலிலுக்குப் புறப்பட்டாள். கோவிலுக்குப் போய்த் தன் மன்னிக்கு முட்டாள் பட்டம் கட்டிவிட வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டாள். - இதுதான் உன் பகவான ? இதில் என்ன இருக்கிறது ? இந்தக் கல் சிலைக்கு ஆத்ம சக்தி ஏது? கலைக்கண்ணுேடு நோக்கும் பொழுது இதில் கைதேர்ந்த சிற்பியின் கைத்திறன் தெரிகிறது: ஆல்ை இதில் பூஜைக்கு உகந்த சக்தி என்ன இருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை! என்று கேட்டுத் தன் மன்னியை மடக்க வேண்டும் என்று அவள் மனத்தில் தீர்மானித் துக் கொண்டாள். - - - -