பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 ஆத்மதிருப்தி ஆளுல்...... கோவிலின் கோபுரவாசலுக்குள் நுழையும்போதே அவளு டைய அந்த எண்ணங்கள் எல்லாம் எங்கோ மாயமாய் மறைந்து விட்டன. அநாயாசமாக நிரந்தர சுகத்தைத் தரும் சக்தி ஒன்று அவளுடைய உள்ளத்தில் குடி புகுந்தது. ஒய்யாரமாக அன்ன நடை பயின்று வந்த அவளுடைய கால்கள், தன் சஞ்சல சுபா வத்தை உதறித் தள்ளிவிட்டு, சாந்தமும், கம்பீரமும் நிறைந்த போக்கைப் பின் பற்றின. அவளேயறியாமலே கால்கள் அவளைக் கோவிலுக்குள் இழுத்துச் சென்றன. உல்லாசமும் அமைதியும் ஒருங்கே ஒளி வீசக் கையில் அர்ச்சனைச் சாமான்கள் ஏந்திச் செல்லும் எண்ணற்ற ஆண் பெண்களே அவள் கண்டாள். பக்தர்களின் வாயிலிருந்து வெளிவரும் பக்திப் பரவசப் பாடல் களும் கோயில் கண்டாமணியின் இனிய நாதமும் ஒன்று கூடி, யாருமே கண்டறியாத ஒருமை மனப்பான்மையையும், அமைதி வாய்ந்த சூழ்நிலையையும் உண்டு பண்ணியிருந்தன. முன்பின் அறிமுகமில்லாத ஒரு சக்தி தன் தளிர்க் கரங்களை நீட்டிக் காரிருளிலிருந்து தேஜோமயமான பிரகாசத்தின் பக்கம் தன்னை இழுத்துச் செல்வதுபோல வனஜாவுக்குத் தோன்றியது. படிகளைத் தாண்டிக்கொண்டு வனஜா ராதாரமணன் கோவி லுக்குள் நுழைந்தாள், மனமோகன உருவம் படைத்த கிருஷ்ண விக்கிரஹத்தையும் ராதையின் விக்கிரஹத்தையும் கண்ட பொழுது பரிசுத்தமான அன்புதான் இப்படி உருவமெடுத்து வந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது. வனஜா ! நீ சாந்தியும் சுகமும் வேண்டும் என்று விரும்புகிருய். சுக போகங்களும் இன்பக் கேளிக்கைகளும் தான் வாழ்க்கையின் பிரதானக் குறிக்கோள்கள் என்று எண்ணுகிருய். ஆனல்...' என்று யாரோ சொல்ல வருவது போலத் தோன்றியது. அவள் மறுமடியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தாள். கடமை, உணர்ச்சி இவற்றுக்கு எடுத்துக் காட் டாக விளங்கும் பூரீராமரும் சீதையும் கண்களெதிரே காட்சி யளித்தனர். அவர்களது பாதார விந்தங்களிலே ஊழியமும் உபாஸ்னயுமே உருவெடுத்த அனுமன் காட்சி அளித்தான். ஆகா, இந்தச் சிலைகளில்தான் என்ன பாவம் ! என்ன பாவம் ! அவை உயிர்ப் பிரதிமைகளாகவே அல்லவா தோற்றுகின்றன? உயிர்க்களையுடன் உரையாடும் இந்தச் சிலைகளைக் கற்சிலை என்று எப்படிச் சொல்வது? கண்களில் தான் என்ன காந்தி ! கற் சிலைக்கு எப்படித்தான் ஜீவன் வந்ததோ ? இதைப் பாராத கண்கள் என்ன கண்கள் ? -

  1. 3

இம்மாதிரியான சித்திர விசித்திரமான எண்ணக் குவியல் கள் அவள் உள்ளத்தில் குடிகொண்டன. தன்ன மறந்து சிந்தனை