பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அன்னையும் பிதாவும் அவன் முகத்தை இரண்டு மூன்று தரம் பங்கஜம் பார்த் தாள். பார்த்துவிட்டுப் பயந்து போளுள். உடனே தன் அண் ணனுக்குச் சங்கதி தெரியப்படுத்தச் சென்ருள். அர்த்தநாரிக்குச் சுரம் கண்டது. முதலில் டாக்டர் டைபாய்ட் என்ருர், பத்து நாள் கழித்து மூளை ஜூரம் என்ரூர். பல நாள் படுத்த படுக்கையாக இருந்தான். கோவிந்தராவும் பங்கஜமும் இடைவிடாமல் படுக்கையண்டை இருந்து பார்த்துக்கொண்டு வந்து, நான்காவது வாரம் சுரம் இறங்கிற்று. இனிப் பயமில்லை ' என்ருர் டாக்டர். பிறகு சில நாள் கழித்துச் சுரம் முற்றிலும் தணிந்து எழுந்து உட்கார்ந்தான். " நான் பறையன், பாதகன், உண்மையில் தீண்டத் தகா தவன், பொய்யன். எனக்கு விவாகம் வேண்டாம். என்னை நீங்கள் மறந்துவிட வேண்டும் என்ருன் அர்த்தநாரி. பங்கஜம் நகைத்தாள். நீர் எந்தச் சாதியாயிருந்தால் என்ன ? என்று சமாதானப்படுத்தினுள். அர்த்ததாரி ஒப்புக்கொள்ளவில்லை. சாதியைப்பற்றி நீ தயங்கமாட்டாய். அது எனக்குத் தெரியும். ஆனால், நான் கொலைபாதகன். என் தகப்பனையும் தாயாரையும் கொன்ற வன் ’’ என்று கதை முழுவதும் சொன்னன். உடம்பு நன்முய்க் குணமானதும், அர்த்தநாரி, தன் வேலைக்கு ராஜினாமா எழுதிக் கொடுத்துவிட்டுக் கோக்கலைக்குப் போய்விட்டான். இப்போது கோக்கலைச் சேரியில், மாரியம்மன் கோயிலில், பள்ளிக்கூடம் வைத்திருக்கும் சாமியார் அர்த்தநாரிதான். س-:o:س