பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்ஷயம் 465 யில் லயித்துவிட்ட அவளுடைய கண்களிலிருந்து எப்பொழுது இரு துளிக் கண்ணிர் பெருகிக் கன்னத்தின் வழியே ஒடிக் காய்ந் தனவோ, தெரியாது! இவ்வாறு வனஜா தன்னை மறந்து நின்று கொண்டிருந்தபொழுது பின்னலிருந்து அவள் தோள்களைப் பிடித்து உலுக்கி, சீ, அசடு எதற்காக அழுகிருய் ? ' என்று கேட்டாள் கிரிஜா, மன்னி நான் அழவில்லையே ஆனந்தக் கண்ணிர் அல் லவா இது இவ்வளவு நாட்களும் சத்தியம், சிவம், சுந்தரம், மங்களம் என்னும் சொற்களைப் பிறர் சொல்லத்தான் கேட்டி ருக்கிறேன். இன்ருே, அவற்றைப் பற்றிய உண்மை அநுபவமே என் உள்ளத்தில் எழுந்திருக்கிறது. அதனல் தான் இந்த ஆனந்த பாஷ்டம் என்ருள் வனஜா. வனஜாவின் வாயிலிருந்து இம்மாதிரியான சொற்களைக் கேட்டதும் கிரிஜாவுக்கு வியப்பாக இருந்தது. தர்க்கத்தில் சளைக்காத வனஜாவா, தர்மத்தை அலட்சியமாக மதிக்கும் வனஜாவா இப்படிப் பேசுகிருள் ? கிரிஜா அவளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தாள். வனஜாவில்ை வாய் திறந்து அதிகமாகப் பேசமுடியவில்லை. கிரிஜாவின் பார்வையில் தோய்ந்திருந்த அர்த்தம் விளங்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. தன் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளைப் பற்றிச் சிந்தித்தாள்: இதைத் தன் தோல்வி என்று ஒப்புக்கொண்டு விடுவதா ? அல்லது திடீரென்று உண்டான உணர்ச்சி என்று உதறித் தள்ளி விடுவதா? என்று அவளால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடிய வில்லை, வனஜா வாய் திறக்காமல் நிற்பதைக் கண்ட கிரிஜா, வனஜா, வா ! இந்தப் புஷ்பத்தையும் மல்லிகைச் சரத்தை யும் தெய்வத்துக்குச் சாற்றச் சொல்லுவோம். இது உன் பக் திக்கு அறிகுறியாக அந்தப் பகவானின் பாதாரவிந்தத்துக்குப் போய்ச் சேரட்டும், தெய்வத்தின் பாதாரவிந்தங்களில் அர்ப்பிக் கப்பட்ட நம் வாழ்க்கைமலர் நம்மைப் பாவம், புண்ணியம் இவற்றினின்றும் காப்பாற்றிக் கடமையின் கண்ணே செல்லத் தூண்டும். பச்சாத்தாபத்தினல் பெருகும் கண்ணிரைக் கொண்டு உள்ளத்தின் அழுக்கை அலம்பலாம். ஆனால் அத்துடன் நம் கடமை பூர்த்தியுற்று விடுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும் விலை மதிப்பற்றது. சாத்துவீகமான கடமையின் பக்கம் நம்மைத் துண்டக் கூடியது. வா, நம் கடன் பணி செய்து கிடப்பதாகவே இருக்க வேண்டும் ' என்று சொன்னள். வனஜா அப்பொழுதும் வாய் திறக்கவில்லை. அவளுடைய உள்ளத்து உணர்ச்சிகள் மெளனம் சாதித்தன. ஆனல் அவள் தன் அழகிய விழிகளால் ஒருமுறை தன் மன்னி கிரிஜாவைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவள் எதையோ அறிந்து &rr~30