பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 ஆத்மதிருப்தி கொள்ள வேண்டும் என்ற அவா கொண்டிருப்பதாகத் தோன்றி யது, அவள் கையில் பூத்தட்டு ஏந்திக் கிருஷ்ணன் கோவிலுக்குள் சென்ருள் அவளுடைய கண்களில் நீர் முட்டியது; வரவரக் கண்ணிர் அதிகரிக்கவும் செய்தது. அதைக் கண்ட கிரிஜா தன் அன்பான கரங்களினல் அவள் தலையை வருடினுள். வனஜாவுக்கு ஏற்பட்டது என்னவோ தோல்விதான். இருந் தாலும் அவளுக்கு உள்ளுற ஆத்ம திருப்தி ஏற்பட்டிருந்தது. கிரிஜாவின் முகத்தில் ஒருவிதப் பெருமிதம் தாண்டவமாடியது. வழி தவறியவனுக்கு வழி காட்டினேம் என்ற பெருமிதம் யாருக்கும் ஏற்படுவது இயல்புதானே ? கிரிஜாவின் முகத்தில் அப்பொழுது தோன்றியிருந்த மகிழ்ச்சியைப் போன்ற மகிழ்ச் சியை உலகத்தில் வேறு எங்குமே காணமுடியாது. 并 米 崇 இருவரும் கோவிலைப் பிரதகதினம் செய்து கொண்டு வீட் டுக்கு வந்து சேர்ந்தார்கள். " ஏன் வனஜா ! நான் சொன்னது உண்மைதானே? ' என்று கேட்டாள் கிரிஜா, ரன்ன ? -அப்பொழுதுதான் தூங்கி விழித்தவள் போல அக்கேள்வி யைக் கேட்டாள் வனஜா. - நம்பிக்கையும் அநுபூதியும் கற்சிலையில்கூட உயிர்ச் சத்தை உண்டாக்கி விடுகின்றன என்று நான் ஒருநாள் உன்னிடம் சொன்னேன். நீ என்ன இருந்தாலும் கற்சிலை கற்சிலேதான் என்று சொல்லி என்னை ஏளனம் செய்தாயே, நினைவிருக்கிறதா? இன்று உன் கண்களில்கூட அந்தக் கற்சிலைகளைப் பார்த்து நீர் சுரந்து விட்டதே அதே கற்சிலைக்கு நீ இன்று பக்தி சிரத்தை யுடன் புஷ்பம் கூடச் சாற்றச் சொன்னயே! ஏன்? ' என்று கேட்டாள் கிரிஜா, வனஜாவுக்கு ஏதோ உணர்ச்சி உந்தித் தள்ளித் தன்னை அப்படிச் செய்யுமாறு தூண்டிவிட்டது என்று தோன்றிற்று. ஏதோ ஒரு வெறியில் ஆழ்ந்து, தான் அந்த வேலைகளைச் செய்து விட்டதாகவே அவள் எண்ணினுள். இருந்தாலும் அவள், 'பக்தியும் சிரத்தையும் கட்டாயம் தேவைதான். இருந்தாலும் கற்சிலை பக்திக்கு உகந்ததுதான என்று யோசிக்க வேண்டும். அந்தக் கற்சிலையில் பகவானின் கற்பனை உருவம் எப்படிக் குடி புகுந்தது? உருவமற்ற பகவானே ஒரு கல்லுக்குள் ஆவாகனம் செய்துவிடுவது என்பது கெட்டிக்காரத்தனம் ஆகுமா? அதுதான் எனக்குப் புரியவில்லை' என்ருள். - -