பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்ஷயம் 467

  • நீ எண்ணுவது தவறு, வனஜா பகவானை ஒரு கற்சிலைக் குள் ஆவாகனம் செய்து விடுவதனால் அவர் ஒரு எல்லைக்குட் பட்டவராக ஒரு நாளும் ஆகிவிட மாட்டார். ஒரே பரம்பொரு ளான அவருக்குப் பல உருவச் சிலைகள் உண்டாக்கப் பட்டிருப் பதே அவர் எங்கும் நிறைந்தவர் என்பதற்குப் பிரமாணம். ஒருமைப் பட்ட உள்ளத்தைப் பெறுவதற்காக நமக்கு ஒரு ஆதாரம், ஒரு பிடிப்பு, ஓர் உதவி தேவையாக இருக்கிறது: அந்தக் குறையைப் பூர்த்தி செய்து கொள்ளுவதற்காக மனித னுடைய கற்பனை, அருவமான கடவுளுக்கு ஒர் உருவத்தை வழங்கியிருக்கிறது. மனத்தை ஒரு நிலையில் நிறுத்த ஒரு பிடிப்பைத் தேடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு தவரு ? ' என்ருள் கிரிஜா.

" அப்படியானல் மூர்த்தி பூஜையில்லாமல் பகவானைப் பெறுவது என்பது இயலாத காரியமா ? ஆமாம், நாம் வேறு கோவில்களில் குடிகொண்டுள்ள பகவானைப் பக்தி செலுத்தக் கூடாதா ?' என்று கேட்டாள் வனஜா. ' செலுத்தக் கூடாது என்று யார் சொன்னர்கள்? ஆனல் அதற்கு ஒரு கடுமையான நிச்சய புத்தியும் ஆத்ம சக்தியும் வேண்டும். அது சாதாரண மனிதனிடத்தில் காணக் கிடைப் பதில்லை. நமது அன்ருட வாழ்க்கை ஒரே ஒட்டமாக ஓடுகிறது; எத்தனையோ பொருள்கள் மனிதனுக்கு அத்தியாவசியத் தேவை யாக இருக்கின்றன. ஆயினும், அவை கிடைப்பது குதிரைக் கொம்பாயிருக்கின்றன. அவை மனிதனுடைய சிந்தனைக்கே எட்டாத பொருள்களாகி விடுகின்றன, என்ருள் கிரிஜா, ஆனல் அடுத்த நிமிஷமே, ' இதோ பார் ' என்று சொல்லிப் பக்கத்திலிருந்த ஒரு மேஜையைக் காண்பித்தாள் இது ஒரு சாதாரண மேஜைதானே ? இம்மாதிரி எத்தனையோ மேஜைகள் கிடைக்கக்கூடும். அப்படி யிருந்தும் இந்த மேஜையின் மீது உனக்கு ஒரு தனிப் பற்றுதல் ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் கார ணம் என்ன ? உன்னல் சொல்ல முடியுமா ?' என்று கேட்டாள், ' இதை என் அம்மா எனக்குக் கொடுத்தாள். இது எனக்கு அவளுடைய ஞாபகார்த்தமாக இருக்கிறது. இது அவள் என்னி டம் காட்டி வந்த அன்புக்கும் ஓர் அடையாளம் ஆகும் அல்லவா?" என்ருள் வனஜா. " . . . - இந்த மேஜையின் மூலம் உனக்கு எப்படிப் பழைய நினைவு களும் அன்பின் அநுபவமும் ஏற்படுகின்றனவோ, அதேபோலக் கோவில்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அந்தப் பரப் பிரும்மத் தின் நினைவும் அநுபவமும் உணர்ச்சி பெற்றெழுந்து நம் கண்க ளுக்கெதிரே நிற்கின்றன. வாழ்க்கையில் மற்றச் சமயங்களில் அவை நம் மனத்துக்குள் மறைந்து நிற்கின்றன. ‘. . . . . . .