பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அrயம் 469 மிச்சம் என்று கூட எண்ணியதுண்டு. அதைவிடச் சினிமாவுக்குப் போவது எவ்வளவோ மேலானது. கல்வியறிவு வளரும் என்று கூட நினைத்தது உண்டு. ஆனல் மன்னி, உண்மையைக் கேட்டால் இன்று கோவிலில் கிடைத்த சாந்தியும் சுகமும் இன்பமும் ஆனந்த மும் இன்றுவரை எனக்கு எந்தக் கேளிக்கையிலும் கிடைத்த தில்லை. இப்படிப் பட்ட சுகம் இருக்கிறது என்று கூட நான் கனவு கண்டதில்லை. மன்னி, நீதான் எனக்குத் தர்மகுரு உன் தர்ம காரியங்களில் என்னையும் பங்கு எடுத்துக் கொள்ள அனு மதிப்பாயா?’ என்று கேட்டவாறே வனஜா மன்னியின் மடியில் தலையைச் சாய்த்தாள். வனஜாவின் வாழ்க்கையில் வியப்பை அளிக்கும் மாறுதல் ஏற்பட்டுவிட்டது. அவள் வாழ்க்கையில் எளிமையும் சாத்வீக பாவமும் தாண்டவமாடின. முகத்தில் ஒரு இணையற்ற ஒளி வீசி யது. காலையும் மாலையும் அவள் தன்னை மறந்து பாடுவாள்: ரகுபதி ராகவ ராஜாராம் பதித பாவன சீதாராம் ஈச்வர், அல்லா தேரே நாம், சப்கோ சன்மதி தே பகவான் (ரகுபதி) இந்தப் பாட்டைக் கேட்போர்கள் அப்படியே அசைவற்று நின்று விடுகிரு.ர்கள்.