பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லார்வி 48 வாழும் வழி 1938 இல் ஒரு நாள்: விடிகிற வேளை, நிலாப்பாடு சாய்ந்து விட்டது. லேசான இருள் எங்கும் பரவி ஒரு மந்த நிலையை உண்டுபண்ணிக் கொண்டி ருந்தது. மெல்லிய காற்ருேட்டத்தால் மரங்களில் உள்ள இலை கள் சற்றே அசைந்தாடிச் சலசலத்துக் கொண்டிருந்தன. கைக் கூலி பெறும் ஊழியர்களைப் போலப் புள்ளினங்கள் இங்கு மங்கும் ஓடி ஆடிப் பாடிக் கூவி உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் உலகத்தை எழுப்ப முயன்று கொண்டிருந்தன. குடிசையின் முன் கால் ஒடிந்த கயிற்றுக் கட்டிவில் படுத்து, லொக்', 'லொக் என்று இருமிக் கொண்டிருந்த கிழவன் பஞ்சநதம் மெல்ல எழுந்து உட்கார்ந்தான். இரவிலே அவன் துரங்கின நேரம், விழித்திருந்த நேரம் என்று தனித் தனியாகப் பிரித்துக் கூற வகையில்லாமல் கண்ணே மூடிக் கொண்டும், இருமிக் கொண்டும், புரண்டு கொண்டும், எழுந்து உட்கார்ந்து கொண்டும் இப்படியே பொழுதைக் கழித்திருந்தான். பெரும் பாலும் எல்லா இரவுகளுமே அப்படித்தான் சென்று கொண்டி ருந்தன அவனுக்கு ஏக்கம்-அதுதான் அவனது அந் நிலைக்குக் காரணம், அவனது எண்சாண் உடம்பிலே இருந்தது ஒரு சாண் துணி தான். மேலுக்கு ஒரு பீற்றல் சாக்கைப் போர்த்திருந்தான். கடந்த நாலந்து ஆண்டுகளாக உடல் நலிந்து கிடந்த அவனுக்கு அவனுடைய மகன் நடேசனும், மகள் மரகதமும் ஆதரவாக இருந்து வந்தனர். மனைவி அஞ்சலை போய் நெடுங்காலம் ஆகி யிருந்தது. - -