பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லார்வி 471 குடிசை முன்புறத் திண்ணையில் படுத்து உடல் வலியாறக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான் நடேசன். பாவம், பகல் முழுதும் வெயில், மழை, காற்று எதையும் பொருட் படுத்தாமல் உழைக்கும் கட்டை இரவிலே தன் வசமிழந்து கிடக்கும் உறக்க நேரம் தான் அவனது அலுத்த உடலுக்கு ஆறுதல். ஏலே 1. தம்பி !... ' என்று இருமிக் கொண்டே இரண்டு மூன்று முறை கூப்பிட்டான் பஞ்சநதம்; அவனது குரல் நடேச னின் உறக்கத்தைக் கலைக்கும் வலு உடையதாக இல்லை. குர லெடுத்துக் கூப்பிட்ட சிரமத்தினுல் மீண்டும் இருமலுக்கு அவன் உள்ளானது தான் மிச்சம். இருமி இருமிக் களைத்தான். பாவம், இந்த வயசிலேயே இந்த உழைப்புத் தாங்கல்லே என்று மனத்திற்குள் அங்கலாய்த்தான். அந்த நாளில் பஞ்சநதம் இதே பிராயத்தில் எதற்கும் அயர்ந்து கொடுக்காத நிலையில் இருந்தான். அதைப் பற்றிச் சிறிது நேரம் அவன் சிந்தித்தான். " ...உம்; அந்தக் காலத்திலே ஆஞ்சனேயரு கடலைத் தாண்டி ளுரு, சஞ்சீவி மலையை ஒரே கையிலே தூக்கிக்கிட்டு வந்தாருன்ன இப்போ என்ன ஆச்சு ? இந்தக் காலத்திலே அதே ஆஞ்சனேயரு பரம்பரையிலே வந்த குரங்கு, கஞ்சாக் கடை முன்னலே காலளு) பட்டாணிக்குக் குட்டிக் கரணம் போடுது !...” இப்படி ஒடிற்று அவன் சிந்தன. நிம்மதியாகத் தூங்கும் மகனே எழுப்ப அவனுக்கு மனமில்லை தான். தவிர்க்க முடியாத நெருக்கடி அவனை உந்திற்று. எனவே, மீண்டும். ' தம்பி!... தம்பி !...” என்று அழைத்தான். அப்போதும் நடேசன் விழித்து எழவில்லை. குடிசைக்குள்ளிருந்து பெண் குரல் ஒலித்தது. ' அண்ணத்தை தான் ரொம்பக் களைச்சுப் படுத்திருக்கே, அதை ஏன் எழுப்பணுமாம் ?’’ - ' களைப்பாறப் பொறக்கலையே தங்கச்சி நாம ? ' 'அது தான் தெரிஞ்சே இருக்கே. அதுக்காவ? இம்மாம் பொழுதிலேயே என்ன வந்திடுச்சாம்: . 'பொழுது விடியப் போவுது தங்கச்சி. இல்லாட்டி எழுப்பு வேன ?’’ - - - - - - . - 'பொழுது...விடியப்.போவுதா ?. சில விடிைகளில் கிழவன் எதிரே வந்தாள் மரகதம்