பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

473 வாழும் வழி அவள் கையில் ஒலைக் கூடை ஒன்றும் புல் அரிவாளும் இருந் தன. கிழவன் அவளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தான்;

நீ...இண்ணைக்குப் புல்லுக்குப் போக வேணும் தங்கச்சி. '
  • : ஏன் ? a y

" உன் அண்ணன் அவசரமா வெளியே போவணும். ' 'வாடிக்கையா வைக்கிற புல்லு வைக்காட்டி...... * *

  • அட, இண்ணைக்கு ஒரு நாளைக்கு ஏதாச்சும் சால்சாப்பு சொல்லிகிட்டா போவுது. ஏன்ன. அண்ணன் பேர்க வேண்டிய அலுவல் ரொம்ப முக்கியமானது. கோவில் நிலத்தையெல்லாம் நாளைக்குப் பங்கீடு செய்யப் போருங்க. எரு, தழை அடிக்கிற வேலையெல்லாம் இண்ணிய ஒரே பொழுதோடே சரி. கூடுத லான எரு, தழை அடிச்சவங்க வரிசைப்படி, நிலத்தைப் பங்கிட்டு சாகுபடிக்கிக் குடுக்கப் போருங்களாம். இன்னி ஒரு பொழுது கொஞ்சம் மொனேஞ்சி வேலை செய்துட்டா, வார பசவியிலே நம்ம கயிட்டம் கொஞ்சம் கொறையும். அட, ஒகோகோன்னு இல்லேன்னுலும் அரை வயித்துக் கஞ்சியும், அரை ஒடம்பு துணியு மாவது கிடைக்குமில்லே ? '

மரகதம் விரக்தி தோன்ற நகைத்தாள். ' போன வருசம் நாயக்கரு நிலத்தெ குத்தகை எடுக்கற அப்பவும் இப்படித்தான் ஏதேதோ மனக்கோட்டை கட்டிளுேம். கடைசியிலே வண்டி மாடு முதல் அல்லாம்ே போயிடுச்சி. கடன்தான் மிச்சம் : ' என்ன செய்யறது? ஆண்டவன் கட்டளை அப்படி இருந் திடுச்சு. ஆன. இந்த வருசம் அப்படி இல்லே. அது குத்தகை: இது வாரம். ' சரி, அப்போ அண்ணனை எழுப்பவா ? ' எழுப்பு, எழுப்பு.’ மரகதம் நடேசனின் அருகில் சென்ருள் குரல் கொடுத் தும், ஒலைக் கூடையால் தட்டி உசுப்பியும் அவனே எழுப்பினுள். நாலு தடவை இப்படியும் அப்படியும் புரண்டு விட்டு எழுந்து உட்கார்ந்த அவன் செவிகளில் பஞ்சநதத்தின் கரகரத்த குரல் பாய்ந்து உணர்ச்சியை உண்டு பண்ணிற்று. . . . தெருவில் வந்து நின்று வானத்தைப் பார்த்துக் கொட்டாவி விட்ட நடேசன், 'அடாடா!...பொழுது விடியற நேரமா யிடுச்சே !...இன்னங் கொஞ்சம் முந்தியே எழுப்பக் கூடாதா அப்பா? " என்று கேட்டான். அவன் உடலில் ஒரு பரபரப்பு