பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லார்வி 473 ஏற்பட்டது. சடக்கென்று திண்ணையிலே பாய்ந்து, தான் படுத் திருந்த கோரைப்பாய், சாக்கு முதலியவற்றைச் சுருட்டி முகட் டிலே செருகியிருந்த கழியிலே இடுக்கிவிட்டு, தங்கச்சி !...' என்றழைத்தான். "அதோ,...வாசப்படியிலே கிடக்கு பாரு, எடுத்துக்க', என்ருள் மரகதம், உள்ளிருந்தபடியே. நடேசன் வாயிற்படியண்டையில் வந்து பார்த்தான். அங்கே ஒரு துணி கிடந்தது. அதை எடுத்து இடையிலே சுற்றிக் கொண்டான். நாள்தோறும் பழகிப் போன செயலே யானுலும் அவன் உள்ளம் வேதனையால் கசிந்தது. நான் போயிட்டு வரேன் ' என்று நடையைக் கட்டினன் நடேசன். அவன் சென்றதும் நீண்ட தோர் பெருமூச்சுடன் மறுபடி கட்டிலில் படுத்தான் பஞ்சநதம். அவன் உள்ளம் துக்கத்தால் நிரம்பியிருந்தது. பழைய நிகழ்ச்சிகள் நினைவலை களாக எழுந்து மோதின. 并 * 동 இன்று ஆய்ந்து ஓய்ந்து செயலற்றுக் கிடக்கும் பஞ்சநதம் அன்று எப்படி இருந்தான் ! பத்துக் காணி நிலத்திற்கும் பெரிய ஒட்டு வில்லை வீட்டிற்கும் உரியவனக ஹோதா வோடு வாழ்ந் தான். பங்காளிப் போர் தலை நீட்டிற்று. அயலாருடன் தகராறு முளைவிட்டது. ஊர்ப் பொது விஷயங்களில் ஏற்பட்ட பிளவு பேருரு எடுத்தது. பஞ்சநதம் மீசையை முறுக்கினகையை எடுப்பதே இல்லை. இச்சகம் பேசும் நண்பர்களின் தூண்டுகோல் அவனைத் தலைசுற்றி ஆடவைத்தது. வம்பு, வழக்கு, நீதிமன்றம்இடையிடையே அவ்வப்போது வீரகர்ஜனே, அடிதடி-இப்படி என்ன என்னவோ நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மனக்களத் திலே ஒயாமல் வீசிக்கொண்டிருந்த புயலுக்கு மாற்று எங்கே, எங்கே என்று ஒரு பரபரப்பு. - நடேசன் தலையெடுக்கிற வ்ேளையில் பஞ்சநதத்தைக் கொடிய காசநோய் பற்றிக் கொண்டது. படுக்கையைச் சரண டைந்தான். . . " நடேசனுக்கு ஒரு பண்ணையில் அரை ஆள் வேலை கிடைத்தது. மரகதமும் அதே பண்ணையில் வீட்டு வேலை செய்ய லாளுள். பண்ணையார் மகன் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து இளித்தாள். அதைக் கண்ட நடேசன் அவளைப் பண்ணையில் வேலை செய்ய வேண்டாமென்று தடுத்து நிறுத்தின்ை. இதைப் புரிந்து கொண்ட பண்ணையார் மகன், நடேசன் மீது திருட்டுக்