பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强74 வாழும் வழி குற்றம் சுமத்தினன். சே பட்டினி கிடந்து செத்தாலும் சரி, இனி அடிமை வேலை செய்வதில்லை 1’ என நடேசன் உறுதி கொண்டான். அன்ருடக் கூலி வேலைக்குப் போய் அகப்பட்ட தைச் சம்பாதித்து வந்தான். சில நாள் வேலை கிடைக்கும் ; சில நாள் கிடைக்காது. சில சமயம் வேலை கிடைத்தாலும் கூவி சரிவரக் கிடைக்காது. குடும்பத்தில் பல நாள் பட்டினி. நடேசனுக்கு மனம் சமாதானமாக இல்லை. தகப்பனுடன் கலந்து யோசனை செய்தான். முடிவில் நாயக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தான். அது, மேலும் விபரீத நிலையை உண்டு பண்ணிற்று. கண்டிஷன் குத்தகை ', உழைத்தவனுக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை. தரித்திரம் வந்தால் சாமானியமாக வருவதில்லேயே ! அதிலும் அது மாணிகளைத்தான் அதிகம் சோதிக்கும். உணவுப் பஞ்சத் தையும் மீறியது அச்சிறு குடும்பத்தில் உடைப் பஞ்சம். அது உச்ச நிலையை அடைந்த போது, அந்தக் குடிசையில் உருப்படி யாக ஒரே ஒரு சாயத்துணிதான் எஞ்சி நின்றது. ஏனேய கந்தல்களில் தையல் போட இடம் இல்லை; அவை நார் நாராகப் போயிருந்தன. கிழவன் தான் படுக்கையிலே கிடக்கிருன், வெளியிலே நடமாடக் கூடியவர்கள் நடேசனும் மரகதமும் தான். இருப்பது ஒரே துணி. சில வீடுகளுக்குப் புல் வைக்க ஒப்புக் கொண்டி ருந்தாள் மரகதம். விடிவதற்குள் அவள் போய்க் கூடையையும் நிரப்பி இரண்டு கட்டுக்களும் கட்டிக் கொண்டு வாடிக்கை வீடு' களில் அவற்றை வைத்து விட்டு வருவாள். அவள் வந்தபின் வேலைக்குப் போவான் நடேசன். மரகதம் கந்தல்களை இணைத்து உடம்பிலே சுற்றிக் கொண்டு குடிசைக்குள் அடைந்து கிடப் பாள். நடேசன் வீடு திரும்பின பிறகுதான் அவள் குடிசையிலி ருந்து வெளிவர முடியும். இப்படியும் உண்டா என்ருல் இருக்கத் தான் இருந்தது. பிடிசோறு கிடைக்காமல் உயிர் நீத்தவர்கள் இல்லையா ? . கோயில் நிலத்ை தயெல்லாம், பண்ணையைக் கலைத்து வார சாகுபடிக்குப் பிரித்து விடப் போவதாகக் கேள்விப்பட்ட பஞ்சநதம் ஆவல் மீதுார மகனின் கைத்தாங்கலில் தள்ளாடி நடந்து தர்ம கர்த்தாவிடம் சென்ருன். பணிவுடன் பேசித் தன் குடும்பநிலையை விளக்கினன். இரக்கம் கொண்ட தர்ம கர்த்தா நடேசனின் உழைப்பை நம்பிக் கிழவனின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்டார் , சாகுபடிக்கு நிலம் தருகிறேன். என்ருர். ஆனால் ஒரே நிபந்தன; மறு நாள் பொழுதுக்குள் நிலங்களில் யார் மிகுதியாக எரு அடிக்கிருர்கள்ோ அவர்களின்