பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு. செல்லப்பா பிரார்த்தனை எல்லோரும் பிரார்த்தனைக்கு வரிசையாக நின்றுகோண் டார்கள். அவன் மட்டும் தன் இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. பிரார்த்தனைக்கு என்று அழைப்பு சப்தம் ஒரு தரத்துக்கு நாலு தரம் அவன் காதுகளில் விழாமலில்லை. தினமும் முதல் சத்தம் கேட்டவுடனேயே தூக்கத்திலும் சுருட்டி மடக்கி எழுந்து அவன்தான் முதலில் போய் நிற்பவன். ஆனல், இன்று கன்னங் களே இரு கைகளிலும் பதித்து தலையைத் தாங்கிக்கொண்டு தரையையே பார்த்துக்கொண்டிருந்தான். ஜெயசிங், ஜெயசிங் அவனுக்கு அந்த இடத்தில் ஒரு கடமை உண்டு. அவன் நிற்கவேண்டிய இடத்தில் காணுமல் போகவே வரிசையிலிருந்து ஒரு குரல் பலத்து கூப்பிட்டது. ஷ்ஷ்...வி அவனே கூப்பிடாதே, ' என்று அவர்களுக்குள் கட்டுப்பாட்டிற்காக தாங்களே தேர்ந்தெடுத்திருந்த தலைவன் குறுக்கிட்டுச் சொன்னன். - பிரார்த்தனையை ஆரம்பிக்கவேறு யாராவது ஆரம்பியுங்கள். ஏன் அவறுக்கென்ன ? : ;,& அவன் தாய் இறந்துவிட்டாள். நேற்று மாலே தந்தி வந்தது. ” . . " ஆமாம், ஆமாம். அவன் மனதை கிளறவேண்டர்ம், என்று பல குரல்கள் சேர்ந்தன,