பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லார்வி 475 வரிசைப்படி நிலத்தைப் பிரித்துக் கொடுக்கும் சலுகை விதிக்கப் பட்டிருந்தது. வண்டி, மாடு, எரு எல்லாமே தேவஸ்தானத் தில் இருந்தன. உழைப்பும் ஊக்கமுமே போட்டியின் எடுத்துக் காட்டுகள். இதை மனத்திலே கொண்டு தான் மகனை அவசர மாக எழுப்பினன் பஞ்சநதம், மரகதமும் தான் புல் அறுக்கச் செல்வதை நிறுத்திக் கொண்டு அண்ணனே அனுப்பி வைத்தாள். பழகிப் போன செயலேயாயினும் நடேசன் வேதனை கொண்டது போல் கிழவனும் வேதனைப்பட்டான். வயசுப்பொண்ணு : தன்னேடொத்த பொண்ணுவளோட, புள்ளிமானப் போல துள்ளி விளையாட வேண்டிய நாளிலே...கந்தலை உடுத்து குடிசைக் குள்ளாற அடைபட்டுக் கிடக்க...நானல்லவா காரணம் !...” என்று எண்ணி எண்ணி மனம் புண்ணுளுன்; 를 發 கதிரவனின் இளங்கிரணங்கள் பட்டதல்ை கிழவனின் சிந்தனை கலைந்தது. போர்வையை விலக்கிக் கொண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தான். தொலைவில் வயல் வெளியில் ஏதோ பெருத்த கூக்குரல் கேட்டது. தன் மகனுக்கு ஏதாவது...என்று கலங்கி விட்டான் கிழவன். எதுவானல் என்ன செய்ய முடியும் ? எழுந்து செல்லத் திராணி இல்லை. தெய்வமே கதி என்று மீண்டும் படுக்கையில் வீழ்ந்தான். சிறிது நேரத்திற்குப் பின் குடிசை வாயிலில் பேச்சுக் குரல் கேட்டது. கிழவன் தலை தூக்கிப் பார்த்தான். இரண்டு பேர் கூடி ஒர் ஆளைச் சுமந்து வந்திருந்தனர். பஞ்சநதம் பதறிப் போனன். அடிபட்டு மயக்க முற்றிருக்கும் ஆள் நடேசன் இல்லை என்பதை அறிந்ததும் பதற்றம் சிறிது குறைந்தது. வந்தவர்களில் வயது முதிர்ந்த குடியானவன், கொண்டு வந்த ஆளைக் குடிசைத் திண்ணையிலே கிடத்தினதும், ' சாமி, நீங்க இவனைக் கவனிச்சுக்குங்க; நான் அங்கே போயி அந்தப் படுபாவிப் பயலுவளைக் கவனிக்கிறேன்" என்று கூறி வேக மாகச் சென்றன். கதர் உடை அணிந்திருந்த வாலிபன் கரங் கூப்பி அவனுக்கு விடையளித்தான். பிறகு பஞ்சநதத்தின் பக்கம் திரும்பி, 'ஐயா..." என்று மெல்ல அழைத்தான். ' கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்ருன். . . . . . நீங்க யாரு?... இந்த ஆளுக்கு என்ன?". இருமல்க ளிடையே திணறிக் கொண்டு கேட்டான் பஞ்சநதம்.