பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 வாழும் வழி நான் வெளியூர்க்காரன். காந்தியடிகளின் அடியார்கள் தோற்றுவித்த சமத்துவ சமதர்ம சேவா சங்கத்தின் ஊழியர்களில் ஒருவன். இவ்வூர்ப் பிரமுகர் வேதாசலத்திடம் நன்கொடை பெற வந்தேன். வழியில் சிறு கலகம். கோயில் நிலங்களில் எரு அடிப்பதிலே தகராறு முற்றி அடிதடி, இந்த ஆளின் தலையில் சரியான அடி விழுந்ததால் இவர் நினைவிழந்துவிட்டார் - உள்ளே இருந்த மரகதத்தால் இதைக் கேட்டப் பின்னும் உள்ளே இருக்க முடியவில்லை ; வெளியே வரவும் முடியவில்லை. ஒலைத் தட்டிக் கதவின் அருகே வந்து நின்று மெல்ல எட்டிப் பார்த்தாள் ; அங்கலாய்த்தாள். ஊழியன் அவள் பக்கம் திரும் பியதும் சட்டென்று பின் வாங்கி மறைந்தாள். பஞ்சநதம் தர்மசங்கடத்தில் தவித்தான். பின்னர் நெஞ்சை அழுத்திக்கொண்டு துயரத்துடன் சொன்னன் : ' ...ஐயா, நான் நடக்க மாட்டாதவன். வீட்டிலும் யாரும் இல்லை...' என்று தழுதழுத்தான். மரகதம் தட்டி மறைவில் வந்து நின்று எட்டிப் பார்த்ததையோ, ஊழியன் அவள் பார்த்த தைக் கவனித்ததையோ அறியவில்லை. - ‘’ எ...ன்...ன... ...வீட்டிலே... யாருமே...இல்லையா ?...' ஊழியன் இவ்வாறு கேட்டதும் பஞ்சநதத்தை இன்னொரு கவலை பிடித்தது. "ஆமானுங்க. நீங்களே உள்ளாறபோயி தண்ணி எடுத்துக்கிடலாமின்ன... அதுக்குங்கூட வகை இல்லே: உள்ளே தண்ணியே இல்லே. வெளியே போயிருக்கிற என் மவன் வந்தாத்தான் தண்ணி ' என்ருன். ஊழியனின் உள்ளத்திலே ஆத்திரம் பிறந்தது. ஆனலும் அதைச் சிரிப்பாக மாற்றிக்கொண்டு சொள்ளுன் : அடிகளாரின், அஹிம்சா : பரமோதர்ம ;', சத்தியமேவ ஜயதே முதலிய பொன்மொழிகளை ஏற்று அதன்படி ஒழுகி மக்க ளுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பது எங்கள் சங்கத்தின் கொள்கை, சாந்தம் வேண்டும், பொறுமை வேண்டும். உங்க ளைப் போன்றவர்களின் செயல்கள் எங்களைப் பொன்றவர்களின் பொறுமையைச் சோதிப்பனவாக இருக்கின்றனவே! ஏனேயா, உயிர் போகும் தறுவாயில் உள்ளவர்களுக்குத் தண்ணீர் கொடுக் கக் கூட மனமில்லாத நீரும் ஒரு மனிதரா ? வீட்டில் யாருமே இல்லை என்று நெஞ்சாரப் பொய் சொல்லுகிறீரே, உண்மையில் உள்ளே யாருமே இல்லையா?”

  • இ.ல்...லை. இ.ரு..க்.கா.ங்...க... ஆன...வெளியே... வர மாட்டாங்க......' • .