பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லார்வி 477 ' எ...ன்...ன...! வெளியே வரமாட்டாங்களா ? இம்மாதிரி ஆபத்துக் காலத்தில் கூட உதவாமல் அப்படி ஒரு கோஷாவா? இதே இடத்தில் உம்முடைய மகனே, மருமகனே அடிபட்டுக் கிடந்தால் நீர் இப்படிப் பேசுவீரா?' சுரீர் என்றது கிழவனுக்கு, அவன் கண்களில் நீர் துளும் பிற்று. கோசாவுமில்லை, மண்ணுங்கட்டியுமில்லிங்க. அப்பறமா வெவரஞ் சொல்றேனுங்க. நீங்க கொஞ்சம் தெருப்பக்கமா திரும்பி கண்ணெ மூடிக்குங்க அந்த யுவன் அவ்வாறே செய்தான். உடனே கிழவன் சற்று உரத்த குரலில், ஒரு குவளையிலே தண்ணிகொண்டா தங்கச்சி ’’ என்ருன். மரகதம் தண்ணிக் குவளையை உள்ளிருந்தபடியே வாயிற்படி யோரத்தில் வைத்து விட்டு மறைந்தாள். கிழவன், 'ஐயா தண்ணி வச்சிருக்கு பாருங்க ' என்ருன். வியப்பில் மூழ்கியிருந்த யுவன் கண்ணைத் திறந்தான். மறு புறம் திரும்பினன். தண்ணிரை எடுத்தான் அடிபட்டவன் முகத்தில் தெளித்தான். அவன் நினைவு பெற்ருன். தண்ணிரைப் பருகிக் களை தெளிந்தான். எழுந்து நின்று நாற்புறமும் நோக்கி ஞன், நிலையை ஊகித்தான். " ஐயா, நான் சண்டை போட்டது என் சித்தப்பாரோடே, என்னை அடிச்சது அவரோட மவன். என்ன என் ஊட்லே கவலை யோட தேடுவாங்க. நான் வர்ரேன் சாமி ' என்று அவன் கிளம் பிஞன். ' எங்கே போகிருய் ? சண்டை நடந்த இடத்துக்கா ?” சாமி சத்தியமா நான் அங்கே போவnங்க 1' என்றவன் திண்ணையினின்றும் இறங்கி வேகமாக நடையைக் கட்டினன். ! ஐயா...' பஞ்சநதம் அழைத்தான் யுவன் திரும்பிப் பார்த்தான். 'இப்படி வந்து குந்துங்க. என்னலே பேச முடி யல்லே. ஆனாலும், நான் ஈவிரக்கமத்த பாவின்னு உங்க மனசிலே பட்ட கெட்ட நினைவைப் போக்கனுமே இப்படி வாங்க ' என்ருன் கிழவன். - - - யுவன் அவன் அருகில் சென்று அமர்ந்தான். பஞ்சநதம் தன் கதையை அடியிலிருந்து சொன்னன். அனைத்தையும் ஒளிக்காமல் சொன்னன் அன்றை நிலைவரையில் சொன்னன்.